சொர்க்கம்யா.. “பியர் கிரில்ஸே” வருவாரே! நம்ம டெல்டாவில் இந்தியாவிலேயே பெரிய லகூன் தீவு - கிளம்பலாமா?
திருவாரூர்: இந்தியாவில் உள்ள அலையாத்தி காடுகளின் 61 சதவீத பரப்பளவை கொண்டு இருக்கும் முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் சதுப்பு நிலக்காடுகள் குறித்தும், லகூன் தீவு பற்றியும் இன்றைய சுற்றுலா பகுதியில் நாம் பார்ப்போம்.
பொதுவாகவே தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் என்றாலே விவசாயம் பற்றிதான் பலரும் பேசுவார்கள். இந்த மாவட்டங்களில் கடல் இருப்பதே பலருக்கு தெரியாது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடல் உள்ளதா என்று கேட்டவர்களும் உண்டு. ஆனால், டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் என அனைத்திலும் கடல் எல்லை உள்ளன.

டெல்டா மாவட்டங்களின் கடலோரம்தான் பாக் ஸ்ட்ரைட் எனப்படுகிறது. இந்த இடத்தில்தான் உலகின் மிகப்பெரிய சதுப்பு நில காடுகளில் ஒன்றான முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் அலையாத்தி காடுகள் அமைந்து உள்ளன. இதில் முத்துப்பேட்டை திருவாரூர் மாவட்டத்திலும், அதிராம்பட்டினம் தஞ்சாவூர் மாவட்டத்திலும் வரும்.
தமிழ்நாட்டில் சதுப்பு நிலக்காடுகள் என்றவுடன் நினைவுக்கு வரும் பிச்சாவரம் காடுகளைவிட இந்த சதுப்பு நிலக்காடுகள் 10 மடங்கு பெரியவை. 119 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த காடுகள்தான் இந்தியாவின் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடாகும். இந்தியாவின் மொத்தம் உள்ள அலையாத்தி காடுகளில் 61 சதவீதம் இந்த பகுதியில்தான் உள்ளது.

இந்த சதுப்பு நிலக்காடுகளை லகூன் தீவு என்று அழைக்கப்படுகின்றன. காவிரியின் கிளை நதிகளான நசுவினி ஆறு, பாட்டுவனாச்சி ஆறு, வளவனாறு, கிளைதாங்கி ஆறு, மரைக்காகோரையாறு, கண்டபறிச்சான்கோரையாறு போன்றவை முத்துப்பேட்டை கடலில் கலக்கின்றன. அந்த ஆழமற்ற பகுதி லகூன் என்று அழைக்கப்படுகிறது.

இப்பகுதியில் வெண்கடல், பன்னுக்குத்தி, கருங்கண்டல், கழுதை முள்ளி, நரிக்கண்டல், நெட்டை, சுரப்புன்னை, குட்டை சுரப்புன்னை, சிறுகண்டல், தில்லை, திப்பரந்தை, மலட்டு சுரப்புன்னை, சோமுந்திரி, சோனரேசியா எபிடெலா போன்ற மரங்கள் வளர்கின்றன. இவைதான் அலையாத்தி காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த அலையாத்தி காடுகள் காரணமாகவே 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களை தாக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக இதற்கு அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்ததாக சொல்கிறார்கள். முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் பகுதிகளை உள்ளடக்கிய 29,713 ஏக்கரில் பரந்துவிரிந்துள்ள இந்த லகூன் பகுதி முக்கிய சுற்றுலா தலமாக இருக்கிறது.

பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் லகூனில் படகு சவாரி செய்து சுற்றிப்பார்க்க முத்துப்பேட்டைக்கு வருகின்றனர். நகர பரபரப்புகளில் காலம் கடத்திய தங்களுக்கு நீரின் இருபுறமும் இருக்கும் அலையாத்தி காடுகள் அமைதியை தரும். 7 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த படகு சவாரி வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தை உங்களுக்கு ஏற்படுத்தும்.

இதன் மொத்த அழகை காண கோபுரங்களும் வைக்கப்பட்டு உள்ளன. செல்லிமுனை பார்வை கோபுரங்கள், நடுவாய்க்கால், உப்புத்தோட்டம், வவ்வால் தோட்டம், . யாழ்பாணத்தான்கோரி, சீப் கார்னர் போன்றவை நீங்கள் தவறவிடக்கூடாத இடங்களாக உள்ளன. நம்ம தமிழ்நாட்ல இப்படியெல்லாம் பகுதிகள் உள்ளதா என்று உங்களை ஏங்க வைக்கும் அளவுக்கு பிரமாண்டம் கொண்டது இந்த லகூன்.

இந்தியாவின் வேறு எந்த சதுப்பு நிலக்காடுகளிலும் இல்லாத அளவுக்கு 162 மீட்டர் நீளத்திற்கு மர நடைபாதை அமைத்து இருக்கிறார்கள். ஜாம்பவானோடை படகுதுறையில் இருந்து இருபுறமும் மரங்களை நீர் பாதையில் 6 கிமீ தூரம் கடந்தால் கடலின் முகத்துவாரத்தை அடையாளம். அங்கு இருக்கும் காட்சியை பார்த்தவுடன் சொர்க்கம்யா என்று நீங்கள் வியந்தாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவுக்கு ஏராளமான மணல் திட்டுகள் குட்டி குட்டி தீவுகளாக காட்சி தரும்.

அக்டோபர் முதல் ஜனவரி வரை இங்கு வருபவர் கூடுதல் போனஸாக சைபீரியா, மத்திய ஆசியா, ரஷியா, ஐரோப்பா என உலகின் பல நாடுகளில் இருந்து வரும் வகை வகையான பறவைகளை கண்டு மகிழலாம். லகூன் தீவுகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் முத்துப்பேட்டையில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு சென்று அனுமதி பெற்ற பிறகு, ஜாம்பவானோடை படகுதுறையில் உள்ள தனியார் மீன்பிடிப் படகுகள் மூலமாக அலையாத்தி காடுகளுக்கு செல்லலாம்.

திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, காரைக்கால் போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் லகூன் தீவுகளுக்கு ஒருநாள் சுற்றுலாவாக வந்து செல்லலாம். முத்துப்பேட்டையில் இருந்து 3.5 கிமீ தொலைவிலும், அதிராம்பட்டினத்தில் இருந்து சுமார் 18 கிமீ தொலைவிலும், திருவாரூரில் இருந்து 58 கிமீ தொலைவிலும், மன்னார்குடியிலிருந்து 40 கிமீ தொலைவிலும் உள்ளன. முத்துப்பேட்டை, அதிராம்பட்டினத்தில் ரயில் நிலையங்களும் உள்ளன.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications