சட்டை பாக்கெட்டிலிருந்து கத்தையாக பணம்! கடைசியில் ரூ.1,000 மட்டும்! அமைச்சர் மூர்த்தி தந்த பரிசு!
மதுரை: அரசுப் பள்ளி மாணவியின் அசத்தல் பேச்சை கேட்ட அமைச்சர் மூர்த்தி, டக்கென தனது சட்டை பாக்கெட்டிலிருந்து ரூ.1,000 பணத்தை எடுத்து கொடுத்து அந்தச் சிறுமியை ஊக்கப்படுத்தி பாராட்டினார்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சுகாதாரத்துறை சார்பில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. அந்த வகையில் மதுரை சக்திமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில், மாணவி ஒருவர் காய்கறிகள் மற்றும் பழங்களின் நன்மைகள் பற்றி பேசினார்.

இயற்கை உணவின் அவசியம் குறித்தும் அந்த மாணவி எடுத்துரைத்தார். சுமார் 15 நிமிடங்கள் வரை அந்த மாணவி பேசிய நிலையில் அதனை முழுமையாக கவனித்த அமைச்சர் மூர்த்தி, சிறுமியை ஊக்கப்படுத்தும் விதமாக தனது சட்டை பாக்கெட்டிலிருந்து ரூ.1,000 பணத்தை எடுத்துக் கொடுத்து பாராட்டினார்.
முன்னதாக அமைச்சர் மூர்த்தி தனது கையில் 500 ரூபாய் நோட்டுக்களை கத்தையாக வைத்திருந்ததை பார்த்த பார்வையாளர்கள் எவ்வளவு பரிசு கொடுக்கப் போகிறாரோ என ஆவலுடன் எதிர்பார்த்தனர். கடைசியில் அமைச்சரோ ரூ.1,000 மட்டும் வழங்கிவிட்டு பொன்னாடை ஒன்றையும் அந்தச் சிறுமிக்கு அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அமைச்சர் மூர்த்தியை பொறுத்தவரை பரிசு கொடுப்பதற்கு தயங்காதவர். ஒவ்வொரு ஆண்டும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என மூன்று ஜல்லிக்கட்டுகளிலும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கக்காசுகளை பரிசாக கொட்டிக் கொட்டிக் கொடுப்பார். இதனிடையே அமைச்சரை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியரும் அசத்தலாக ஆரோக்யம் பற்றி பேசிய அரசுப் பள்ளி மாணவியை பாராட்டினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications