ஸ்டாலின் மாலத்தீவு செல்லவில்லை.. கொடைக்கானல் வருகிறார்.. வெளியான முழு விவரம்
கொடைக்கானல்: தமிழக முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியான நிலையில், அதனை திமுக மறுத்துள்ளது. அதேநேரம் ஸ்டாலின் கொடைக்கானல் வர உள்ளார். ஏப்ரல் 29ம் தேதி இங்கு வரும் நிலையில், அவர் குடும்பத்துடன் மே 4 வரை தங்கி ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்தல் வேலைகளை செய்தார்கள்.

இப்போது தேர்தல் முடிந்ததை அடுத்து அரசியல் தலைவர்கள் கோடை வெயிலுக்கு இதமாக் ஊட்டி, கொடைக்கானல், மூணாறு உள்ளிட்ட முக்கிய கோடை வாசஸ்தலங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். குறிப்பாக பலரும் கொடைக்கானலுக்கு படை எடுத்து வருகிறார்கள்.. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்களது குடும்பத்துடன் கொடைக்கானலில் தங்கி சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்து வருகிறார்கள்.
அந்த வரிசையில், தமிழக பாஜக தலைவரும், கோவை லோக்சபா தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு வந்தார். அவர் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். இதேபோல் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானலுக்கு வந்தனர்.
குளு, குளு சீசனை அனுபவிக்க கொடைக்கானலுக்கு ஏற்கனவே பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஏரளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் கொடைக்கானலுக்கு வருகின்றனர். இதனால் கொடைக்கானல் களைகட்டியுள்ளது.
இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக வருகிற 29-ந்தேதி(திங்கட்கிழமை) கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல்வர் வருகையை ஒட்டி, நெடுஞ்சாலை துறை சார்பில் கொடைக்கானல் வத்தலக்குண்டு சாலையில் பராமரிப்பு பணிகளும் தொடங்கியுள்ளன
முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் வத்தலக்குண்டு பிரதான சாலை வழியாக கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. கொடைக்கானலில் ஏப். 29 முதல் மே 4 வரை ஓய்வு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் செல்லும் இடங்கள் ,ரோடுகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி கொடைக்கானலில் ஆய்வு செய்ய உள்ளார்.
2021ல் சட்டசபை தேர்தல் முடிந்த பின் முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானல் பாம்பார்புரம் தனியார் விடுதியில் ஒரு வாரம் தங்கினார். இந்நிலையில் லோக்சபா தேர்தல் முடிந்து ஓய்வுக்காக அதே ஓட்டலில் தங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications