39% வாக்குகள்.. 2026ல் தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சிதான்.. மீண்டும் உறுதியாகச் சொன்ன அமித் ஷா
நெல்லை: "தமிழ்நாட்டில் 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும்" என மீண்டும் உறுதிபடப் பேசியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. பாஜக - அதிமுக வெறும் அரசியல் கூட்டணி அல்ல. தமிழக மக்களை மேம்படுத்தும் கூட்டணி என அமித்ஷா பேசியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நெல்லையில் நடைபெற்று வரும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.

இந்த மாநாட்டில் பேசிய அமித் ஷா, "புண்ணிய பூமியான தமிழகத்தில் தமிழக மக்களாகிய உங்களிடம் தமிழில் பேச முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தமிழக மண் வீரம், கலாச்சாரம் மிக்கது, அதனை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன்.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாதத்தின் முதுகெலும்பை நொறுக்கினார் பிரதமர் மோடி. பஹல்காமில் மதத்தின் பெயரால் நடந்த தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதத்தை வேரோடு அழிப்போம் என உறுதி பூண்டார் பிரதமர் மோடி. தமிழ் மண், மொழி, மக்கள் மீது பற்று கொண்டவர் பிரதமர் மோடி.
சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக இருப்பார்.
2026ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும். பாஜக - அதிமுக வெறும் அரசியல் கூட்டணி அல்ல. தமிழக மக்களை பாஜக - அதிமுக கூட்டணி மேம்படுத்தும். அமித்ஷா பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள என்.டி.ஏ கூட்டணி ஆட்சிதான் அமையும்.
கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 18% வாக்குகள் பெற்றிருந்தது. கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 21% வாக்குகளைப் பெற்றிருந்தது. தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி 39% வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்கப்போகிறது" எனப் பேசியுள்ளார் அமித்ஷா.












Click it and Unblock the Notifications