நயினார் ஆப்சென்ட்! காலியாக இருந்த நாற்காலிகள்! நெல்லை பாஜக மாநாட்டில் ஷாக்கான முருகானந்தம்!
நெல்லை: நெல்லையில் நடந்த பாஜக சிறுபான்மையினர் மாநில மாநாட்டில் 2000 நாற்காலிகள் போடப்பட்டும், அவை காலியாகவே இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் வரும் தேர்தலில் ஆட்சியை பிடிப்போம் என ஏ.பி. முருகானந்தம் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக சார்பில் சிHறுபான்மையினர் அணியின் மாநில மாநாடு நெல்லை உடையார்பட்டியில் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறுபான்மையினர் அணியின் மாநில தலைவர் கோவை ஜான்சன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாலர் ஏ.பி.முருகானந்தம் பேசுகையில், கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியுடன் யாரும் வரவில்லை என்றால் வேட்பாளர்களை அறிவித்துத்தான் ஆக வேண்டும். ஒரு அளவுக்கு பொய் பேசலாம். ஆனால் பொய்யே பேசிக் கொண்டிருந்தால் மிகவும் கஷ்டம்.
நல்லவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கடைகள் எங்கும் உருவாகியுள்ள கஞ்சா புழக்கம் என அரசுக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. தற்போது திமுக அரசுக்கு எதிரான அலை உருவாகியுள்ளது.
திமுக கூட்டணிக்கு யாரெல்லாம் கிடைக்கிறார்களோ அவர்களையெல்லாம் கூட்டணியில் எல்லாவற்றையும் சரி கட்டி இணைத்துள்ளார்கள். எங்கள் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. களம் எங்களுக்கு சாதகமாக உள்ளது. மக்கள் எங்களுடன் உள்ளனர்.
என்டிஏ கூட்டணி மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். சிறுபான்மையினரின் முழு ஆதரவு நமக்குத்தான். இது வரும் தேர்தலில் எதிரொலிக்கும். வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என தெரிவித்தார்.
ஏ.பி. முருகானந்தம் பேசிக் கொண்டிருந்த போது போதிய கூட்டம் இல்லை. 2000 நாற்காலிகள் போடப்பட்ட அவற்றில் பெரும்பாலானவை காலியாகவே இருந்தது. கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இல்லாததால் இருக்கைகள் காலியாகவே இருந்தன. சொந்த தொகுதியில் நடந்த கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பங்கேற்காதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications