சுற்றுலா தொழில் செய்ய ஆர்வமா? தமிழ்நாடு சுற்றுலா துறை முக்கியமான அறிவிப்பு.. 31ம் தேதி கடைசி நாள்
சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுலா தொழில் முனைவோர் தமிழக சுற்றுலாத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா தொழில் தற்போது அதிவேகமாக வளர்ந்து வருகிறது. விரும்பிய இடங்களுக்கு அழைத்து செல்வது, தமிழகத்தில் சுற்றுலா தளங்களங்ளுக்கு வழிகாட்டுவது, ஓட்டல் அறை முன்பதிவு முதல் பல்வேறு பேக்கேஜ்களில் சுற்றுலா திட்டங்களை செயல்படுத்துபவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

சென்னை , கோவை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் மக்கள் வார இறுதிகளை சுற்றுலா சென்று மகிழ்ச்சியோடு வாழ விரும்புகிறார்கள். ஐடி வாழ்க்கை முறைக்கு மாறிய பலர், இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து வாரத்தில் இரண்டு நாட்கள் விடுபட நினைக்கிறார்கள். அதற்காக அதிக தொகைகளை செலவிடவும் தயாராக உள்ளார்கள்.
நல்ல உணவு, அருமையான கிளைமேட், மனதிற்கு இதமளிக்கும் பசுமையான பகுதிகள், அமைதியான இயற்கை வாசல்தளங்கள், அருவிகள், ஆறுகள், மலைவாசல் தளங்களை மக்கள் விரும்புகிறார்கள்.
கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கி கிடந்த மக்கள் தற்போது சுற்றுலாவில் அதிக ஆர்வம்காட்டுகிறார்கள். முன்எப்போதும் இல்லாத அளவிற்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிக அளவு உயர்ந்துள்ளது. வரும் காலத்தில் சுற்றுலா தொழில் மிகப்பெரிய வளர்ச்சி பெறும் என்பதால் அதில் சேர இளைஞர்கள் ஆர்வம் காட்டலாம். சுற்றுலா துறை சார்ந்த படிப்புகளுக்கும் அதிகப்படியான வரவேறப்பு இனிமேல் இருக்கும்,
சரி விஷயத்திற்கு வருவோம். தமிழ்நாட்டில் சுற்றுலா தொழில் முனைவோர், சுற்றுலா தொழில் தொடங்கி விரும்புவோர், தமிழக சுற்றுலாத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் சுற்றுலா சார்ந்த தொழில்முனைவோர் மற்றும் புதிதாக சுற்றுலா தொழில் தொடங்க உள்ளவர்கள், தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் கட்டாயமாக தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதன்படி, சுற்றுலா சார்ந்த தொழில் முனைவோர்களான படுக்கை மற்றும் காலை உணவுவழங்குபவர்கள், தங்கும் விடுதிகள், வீடுகளை வழங்குபவர்கள், சாகச சுற்றுலாக்களை நடத்தி வருபவர்கள், கேரவன் சுற்றுலா மற்றும் கேரவன் பூங்காக்களை நடத்தி வருபவர்கள் உள்ளிட்டோர் www.tntourismtors.com என்றசுற்றுலாத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் 31-ம் தேதிக்குள் தங்களை கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்ய தவறுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளாகத்திலும், 044 25333358, 7550009331 என்ற தொலைபேசி எண்களையும் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் சுற்றுலா தொழில் தொடங்க கண்டிப்பாக பதிவு செய்தாக வேண்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications