இன்று முதல் திருச்சி-யாழ்ப்பாணம் விமான சேவை..4 நாட்களில் குறைந்த செலவில் "சர்வதேச ஆன்மீக சுற்றுலா"!
சென்னை: தமிழ்நாட்டின் திருச்சியில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு இன்று முதல் தினசரி விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன. இதனால் இலங்கையில் தமிழர்கள் வாழும் பூர்வீக பூமிக்கு குறைந்த நாட்களில், குறைந்த செலவில் எளிதாக 'சர்வதேச ஆன்மீக சுற்றுலா' சென்று திரும்பும் வாய்ப்பும் நமக்கு கிடைத்துள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புக்குதான் தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது திருச்சியில் இருந்து இலங்கையில் தமிழர்களின் பூர்வீக நிலமான யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்துக்கும் தினசரி விமான சேவைகளை இயக்குகிறது இண்டிகோ நிறுவனம்.

திருச்சியில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் செல்வதற்கு 1 மணிநேரம்தான். இதனால் இலங்கையில் தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணம் உள்ளடங்கிய வடக்கு, திருகோணமலையை உள்ளடக்கிய கிழக்கு பகுதிகளுக்கு இனி எளிதாக ஆன்மீக சுற்றுலா செல்லலாம்.. அது எப்படி என பார்ப்போம்.
திருச்சியில் இருந்து புறப்பட்டு 1 மணிநேரத்திலேயே யாழ்ப்பாணத்தை சென்றடைந்துவிடலாம். அதே நாளிலேயே யாழ்ப்பாணத்தில் உள்ள சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலான, நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்று வழிபடலாம். இதன் பின்னர் சரித்திரப் புகழ்பெற்ற யாழ்ப்பாணம் கோட்டையை பார்வையிடலாம். அன்று இரவு யாழ்ப்பாணத்தில் தங்கி ஓய்வெடுக்கலாம்.

2-வது நாளாக தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் இருந்து கூப்பிடும் தொலைவில்தான் இருக்கும் இலங்கையின் நயினா தீவில் உள்ள நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு படகில் சென்று வழிபாடு நடத்தலாம். அதன் பின்னர் சர்வதேச புகழ் வாய்ந்த யாழ்ப்பாணம் நூலகத்தைப் பார்வையிட்டு பின்னர் பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் கோவிலில் தரிசனம் செய்யலாம். 2வது நாளாக யாழ்ப்பாணம்- மன்னார் பயணத்தை நிறைவு செய்துவிட்டு திருகோணமலையில் இரவு தங்கலாம்.
3-வது நாளாக, திருகோணமலையில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற பாடல் பெற்ற திருத்தலமான திருக்கோணேஸ்வர் ஆலயம் சிவபெருமானை தரிசித்துவிட்டு திருகோணமலை துறைமுகம், கிண்ணியாவில் உள்ள வெந்நீர் ஊற்றைப் பார்வையிட்டு வற்றப்பலையில் உள்ள கண்ணகை அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தலாம். அன்று இரவு பருத்தித்துறையில் தங்கலாம்.

4-வது மற்றும் இறுதி நாளில் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து வல்வெட்டித்துறை, தொண்டைமனாறு செல்வ சந்நிதி முருகன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் சென்றுவிடலாம். அடுத்த ஒரு மணிநேரத்தில் திருச்சிக்கு திரும்பிவிடலாம். குறைவான நாட்களில் மிகவும் குறைவான செலவில் ஒரு சர்வதேச ஆன்மீக சுற்றுலாவுக்கு தயாராகுங்கள் மக்களே!

-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications