விசாவே தேவையில்லை.. குறைந்த பட்ஜெட்டில் இந்த 6 நாடுகளுக்கு போய்வரலாம்.. இதோ விவரம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விசாவே இல்லாமல் இந்தியாவில் இருந்து 6 நாடுகளுக்கு நம்மால் சென்று வர முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம்.. விசாவும் இல்லாமல் குறைந்த பட்ஜெட்டிலும் இந்த 6 நாடுகளுக்கு சென்றுவிட்டு வந்துவிடலாம். லிஸ்டில் உள்ள அந்த 6 நாடுகள் எவையெல்லாம்? அங்கு எப்படி செல்வது? என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

வாழ்க்கையில் ஒரு முறையாவது ஏதாவது ஒரு வெளிநாட்டுக்காவது போயிட்டு வந்துடணும்பா என்று நினைப்பவர்கள் ஏராளம். ஆனால் வெளிநாடு போக வேண்டும் என்றால் விசா எடுக்கணும், லட்ச கணக்கில் செலவாகும் என்று நினைத்துக்கொண்டு அதில் ஆர்வம் காட்டாமல் பலரும் இருப்பதுண்டு.

tour visa world

ஆனால் விசாவே இல்லாமல் இந்தியாவில் இருந்து 6 நாடுகளுக்கு நம்மால் சென்று வர முடியும். அதுவும் குறைந்த பட்ஜெட்டில் இந்த 6 நாடுகளுக்கு விசா இல்லாமலே போயிட்டு வந்துடலாம். என்னங்க சொல்றீங்க என நீங்கள் நினைப்பது புரிகிறது. லிஸ்டில் உள்ள அந்த ஏழு நாடுகள் எவையெல்லாம் என்பது குறித்தும், எப்படி செல்வது என்பது பற்றியும் இங்கே விரிவாக பார்க்கலாம். இந்த 6 நாடுகளுக்கும் குறைந்த செலவில் சென்று வந்துவிடலாம்.

சமோவா: தெற்கு பசிபிக் நாடுகளில் ஒன்று சமோவா. குட்டி தீவு நாடான சமோவா சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஹவாய் மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே இந்த நாடு இருக்கிறது. இந்த நாட்டில் உள்ள கலாச்சாரம் கடற்கரைகள் சுற்றுலா பயணிகள் விரும்பி ரசிக்கும் இடமாக உள்ளது. இந்த நாட்டுக்கு விசா இல்லாமல் 90 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும்.

பார்படோஸ்: கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றே பார்படோஸ். சுற்றுலாப் பயணிகளுக்கு சொர்க்க பகுதியாக இந்த நாடு உள்ளது. இந்தியர்கள் விசா இன்றி இந்த நாட்டிற்கு சென்று வர முடியும். அதுவும் ஒருமாதம் அல்ல இரண்டு மாதம் அல்ல, ஆறு மாதங்கள் வரை விசா இன்றி அந்த நாட்டில் தங்க முடியும்.

நேபாளம்: இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த நாடு இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை கொண்டது. மலைப்பிரதேசங்கள், ஆழமான பள்ளத்தாக்குகள் என சுற்றுலாப் பயணிகளுக்கு சொர்க்கமாக இந்த நாடு விளங்குகிறது.

நேபாள நாட்டிற்கு ஆன்மீகப் பயணமாகவும் உலக அளவில் பல்வேறு பயணிகள் செல்கின்றார்கள் இந்தியாவில் இருந்து இந்த நாட்டிற்கு ரயில் போக்குவரத்தே உள்ளது. பாஸ்போர்ட் கூட இல்லாமல் இந்த நாட்டிற்கு இந்தியர்கள் சென்று வர முடியும். விசா எதுவும் தேவையில்லை. ஆனால் இந்தியாவில் வசிக்கிறோம் என்பதற்கான இந்திய குடிமகன் என்ற அடையாள ஆவணம் கட்டாயம் ஆகும்.

பூடான்: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அமைந்துள்ளது பூடான். இமயமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த நாடு தனது பெரும்பாலான நிலப்பகுதி எல்லையை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்தியர்கள் இங்கு செல்ல வேண்டும் என்றால் விசா எதுவும் தேவையில்லை. ஆதார் உள்ளிட்ட இந்தியாவின் அடையாளச் சான்று ஏதேனும் ஒன்றைக் காண்பித்து அந்த நாட்டிற்கு சென்று வரலாம். நீண்ட காலம் தங்குவது என்றால் அந்த நாட்டில் உள்ள அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது அவசியம் ஆகும்.

மாலத்தீவு: இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு மாலத்தீவு. நூற்றுக்கணக்கான தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாடு சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்துள்ளது. இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளின் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு அடிக்கடி செல்கிறார்கள். இந்தியாவுக்கு மிக நெருக்கமாக உள்ள நாடுகளில் இதுவும் ஒன்று. இங்கு நாம் விசா இல்லாமலே செல்ல முடியும்.

மொரிஷியஸ் தீவுகள்: இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மொரிஷியஸ். அடர்ந்த வனப் பரப்புகள் மற்றும் தீவுக் கூட்டங்கள் ஆகியவை இந்த நாட்டில் நிறைந்து காணப்படுகின்றன. சுற்றுலாவிற்கு செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. எனினும் தொழில் காரணங்களுக்காகவும், நீண்ட காலம் அந்த நாட்டில் தங்குவதற்காகவும் சென்றால் விசா பெறுவது அவசியம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+