சென்னையில் இருந்து மகாபலிபுரத்திற்கு சுற்றுலா.. ஒரு குடும்பத்திற்கே இப்படியா ஆகணும்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் உலக புகழ் பெற்ற சுற்றுலா தலம் ஆகும். பல்லவர்களின் சிற்பக் கலையை பறைசாற்றும் மகாபலிபுரத்தில் உள்ள இடங்கள் அனைத்துமே தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புகழ் பெற்ற இடங்கள். சென்னைக்கு மிக அருகில் உள்ள மகாபலிபுரத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் செல்கிறார்கள். முற்றிலும் சுற்றுலா நகரமாக மாறிவிட்ட மகாபலிபுரத்தில் கடற்கரையில் குளிப்பது பலருக்கும் பிடிக்கும். அங்கு சென்று குளித்த ஒரே குடும்பத்தினருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் கடற்கரை, கடற்கரை கோவில், குகைக்கோவில், கலங்கரை விளக்கம், பஞ்ச பாண்டவ குகை, அர்ஜுனனின் தவம், கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து, பஞ்ச ரதம் சீஷெல் அருங்காட்சியகம், சிற்ப அருங்காட்சியகம், வராஹ குகை கோயில், கணேச ரத கோயில் என பல இடங்கள் உள்ளன. இவற்றை எல்லாம் சுற்றி பார்க்க வரும் பலர் மகாபலிபுரத்தில் உள்ள மிக அழகான கடற்கரையில் குளிக்கிறார்கள். இந்த கடற்கரை பார்க்க மிக அழகாக இருக்கும்.

மகாபலிபுரம் ஏன் ஆபத்தானது
ஆனால் இந்த கடற்கரை எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அதேபோல் ஆபத்தையும் கொண்டுள்ளது. இங்கு குளிப்பதற்கு தடை உள்ளது. ஆனால் பலர் இதனை பொருட்படுத்துவதே இல்லை.. சில நாட்களில் குளத்தில் உள்ள தண்ணீர் போல் மகாபலிபுரம் கடற்கரை அமைதியாக இருக்கும். ஆனால் பெரும்பாலான நாட்களில் மிக ஆக்ரோஷமாக இருக்கும். திடீரென ராட்சத அலைகள் வந்து குளிப்பவர்களை தூக்கி சென்றுவிடும். மகாபலிபுரத்தில் சுற்றுலாவாக வந்தவர்கள் குளித்த போது பல அசம்பாவிதங்கள் நடந்துள்ளது. அப்படித்தான் சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு நடந்துள்ளது.
சென்னையில் இருந்து சுற்றுலா
சென்னை அகரம் பகுதியை சேர்ந்த 37 வயதாகும் வெங்கடேசன் என்பவர் தச்சு தொழில் செய்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெங்கடேசன் தனது மகள்கள் கார்த்திகா (17), துளசி (16) மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 17 பேருடன் சூளேரிக்காடு கடற்கரைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
இழுத்து செல்லப்பட்ட சகோதரிகள்
அங்கு கடலில் குளித்தபோது ராட்சத அலையில் வெங்கடேசன், அவரது மகள்கள் கீர்த்தனா, துளசி, ஆகியோர் ஒரே நேரத்தில் நடுக்கடலுக்கு இழுத்து செல்லப்பட்டார்கள். கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட வெங்கடேசன் உடல் கரை ஒதுங்கியது. கடலில் மாயமான கீர்த்தனா, துளசி ஆகியோரது உடலை மாமல்லபுரம் போலீசார் மீனவர்களின் உதவியுடன் படகு மூலமும், கடலோர பாதுகாப்பு படையின் விமானம் மூலமும் 2 நாட்களாக தீவிரமாக தேடினர்.
கலங்கிய உறவினர்கள்
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் கார்த்திகா, துளசி இருவரது உடல்கள் அழுகிய நிலையில் சூளேரிக்காடு கடற்கரையில் கருங்கல் பாறைகளில் சிக்கி ஒதுங்கி இருந்ததை கண்டு மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து அழுகிய நிலையில் காணப்பட்ட கார்த்திகா, துளசி இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2நாட்களாக கடற்கரையில் காத்து கிடந்த உறவினர்கள் அழுகிய நிலையில் இருவரது உடல்களையும் பார்த்தபோது கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது.
மகாபலிபுரம் கடற்கரையில் குளித்தால் என்ன சிக்கல்
மகாபலிபுரம் கடற்கரையில் தயவு செய்து குளிக்க வேண்டாம். திடீரென அசம்பாவிதங்கள் நடக்கும் வாய்ப்பு உள்ள ஆபத்தான கடற்கரை என்பதால் தவிர்ப்பதே நல்லது. இதற்கு காரணம் இருக்கிறது. குளிக்க அனுமதியே தந்தாலும், நடைமுறையில் ஆபத்தாக இருக்க சில காரணம் இருக்கிறது. ஏனெனில் மகாபலிபுரம் கடற்கரையை பொறுத்தவரை கிழக்கு கடற்கரையாக இருக்கிறது. இங்கு அலைகளின் ஓட்டம் (நீரோட்டங்கள்) மற்றும் ரிப் டைட்ஸ் எனப்படும் திடீர் இழுவிசை நீரோட்டங்கள் மிகவும் வலுவாக இருக்கும். இதனால் நீச்சலில் திறமை வாய்ந்தவர்கள் கூட கடலுக்குள் திடீரென இழுக்கப்படும் அபாயம் உள்ளது. நீரில் மூழ்குதல் சம்பவங்கள் அடிக்கடி நடக்க இதுவே காரணம் ஆகும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications