அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம்
நியூயார்க்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் கவுடி பள்ளியைச் சேர்ந்த அனுரூப் ரெட்டி அமெரிக்காவில் வசிக்கிறார்கள். இவர் லூசியானாவின் டொரோடோ பார்க் பகுதியில் சேபான் ஆற்றுக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அனுரூப் ரெட்டியின் 3 நண்பர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது சுதாரித்த அனுரூப் நண்பர்கள் 3பேரையும் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றினார். ஆனால் அவர் காலில் மீன்பிடிக்கும் ஒயர் சுற்றியதால் எதிர்பாராத சம்பவம் நடந்தது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திர ரெட்டி குடும்பத்தினர், ஹைதராபாத் அருகே உள்ள கவுடி பள்ளி பகுதியில் வசிக்கிறார்கள். இவர்களது மகன்கள் அஸ்ரித் ரெட்டி, அனுரூப் ரெட்டி (வயது 23) இருவரும் படிப்பதற்காக ஒருவர் பின் ஒருவராக அமெரிக்கா சென்றனர். அனுரூப் ரெட்டி 2024-ல் அமெரிக்கா சென்று சமீபத்தில் நார்த் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை படித்து முடித்தார்.

பணியில் சேர தயாராகி வந்த அனுரூப் ரெட்டி, நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டார். இதன்படி அமெரிக்காவின் லூசியானா மற்றும் டெக்சாஸ் மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற டோலிடோ பெண்ட் பகுதியில் உள்ள சபீன் ஆறுக்கு செல்ல விரும்பினார். இந்த சபீன் ஆறு அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் லூசியானா மாநிலங்களுக்கு இடையே எல்லையாக பாயும் ஒரு மிக முக்கியமான ஆறாகும். சுமார் 890 கி.மீ நீளமுடையது ஆகும்.
அமெரிக்காவின் அதிக மழைப்பொழிவு பெறும் பகுதியில் இந்த சபீன் ஆறு அமைந்துள்ளதால், இதில் எப்போதும் நீர்வரத்து அதிகமாக இருக்கும். குறிப்பாக, சில பகுதிகளில் நீரோட்டமும், ஆழமும் மிக அதிகமாக இருப்பதால் நீச்சல் அடிப்பதற்கு மிகவும் சவாலான மற்றும் ஆபத்தான ஆறாக இது கருதப்படுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 'டோலிடோ பெண்ட் நீர்த்தேக்கம்' ) அமெரிக்காவின் மிகப்பெரிய செயற்கை ஏரிகளில் ஒன்றாகும். இதனைச் சுற்றி பல பொழுதுபோக்கு பூங்காக்கள், படகு சவாரி தளங்கள், முகாம்கள் மற்றும் மீன்பிடி தளங்கள் உள்ளன. இங்கு
சுற்றுலாப் பயணிகளும் மாணவர்களும் இங்கு விடுமுறையைக் கழிக்கவும், மீன்பிடிக்கவும் அதிகளவில் வருவது வழக்கம். அப்படித்தான் அனுரூப் ரெடி தனது நண்பர்களுடன் வந்து ஜாலியாக பொழுதை கழித்துள்ளார்.
அப்பொழுது அவரது 3 நண்பர்கள் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். உடனே சுதாரித்த அனுரூப், வேகமாக நீந்திச் சென்று நண்பர்களை ஒவ்வொருவராக இழுத்து வந்து கரையில் சேர்த்துள்ளார். பின்னர் அவர் கரையேற முயன்றபோது அவரது காலில் மீன்பிடிக்கும் ஒயர் மாட்டிக் கொண்டது. அதே நேரத்தில் ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் அனுரூப் ஆற்றில் மூழ்கிவிட்டார். கரையில் இருந்த நண்பர்கள், அவரை காப்பாற்ற செய்த முயற்சி பலனளிக்கவில்லை. இறுதியில் அனுரூப் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகனின் இறந்த செய்தி கேட்டு அவனது பெற்றோர் கதறி அழுதனர். அனுரூப், பிடெக் படித்து முடித்ததும் இந்தியாவில் நல்ல வேலை கிடைத்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் சென்று வேலைபார்ப்பதே தனது கனவு என்று கூறி அங்கு படிக்கச் சென்றுள்ளார். அவன் அங்கு உயிரிழந்ததை கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவனது பெற்றோர் கண்ணீர் மல்க கூறினார்கள். மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications