Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாலத்தீவு "ஹனி மூன்" டிக்கெட்டை திடீரென கேன்சல் செய்யும் இளசுகள்.. பின்னணியில் இப்படியொரு காரணமா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாலத்தீவுக்குச் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்த டிக்கெட்களை இந்தியர்கள் பலரும் கேன்சல் செய்து வருகின்றனர். இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.

இந்தியர்கள் விரும்பி சுற்றுலா செல்லும் இடங்களில் முதன்மையானது மாலத்தீவு.. குறிப்பாகத் திருமணமான இளசுகள் பலரும் மாலத்தீவுக்கு தான் செல்வார்கள்,

 What is the reason as many Indians are now Cancelling their Maldives Trips

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மாலத்தீவு இளசுகள் மத்தியில் டிரெண்டிங்கில் தான் இருக்கும். இப்போது மாலத்தீவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஆனால், நல்ல காரணத்திற்காக இல்லை. என்ன பிரச்சினை.. இந்தியர்கள் மாலத்தீவு டிக்கெட்டை கேன்சல் செய்ய என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.

பிரதமர் மோடி: சமீபத்தில் தான் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்குச் சொந்தமான லட்சத்தீவுக்கு சென்றிருந்தார். அங்கே சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதன் பிறகு மாலத்தீவு அமைச்சர் ஒருவர் பதவிட்ட ட்வீட் காரணமாகவே இப்போது பலரும் தங்கள் மாலத்தீவு பயணத்தை கேன்சல் செய்து வருகின்றனர்.

இந்தியா மாலத்தீவு குறிவைப்பதாகக் கூறிய அந்த அமைச்சர் மரியம் ஷியுனா, பீச் சுற்றுலாவில் மாலத்தீவுடன் இந்தியாவால் போட்டியிட முடியவில்லை என்றும் இதன் காரணமாகவே இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்றும் இந்தியாவை குற்றஞ்சாட்டும் வகையில் கூறியிருந்தார். VisitMaldives என்ற ஹேஸ்டேக் டிரெண்டான நிலையில், அவர் இதைக் குறிப்பிட்டு இருந்தார். மேலும், பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையிலும் கருத்து பதிவிட்டிருந்தார்.

இனவெறி கருத்துகள்: அதேபோல மேலும் சில மாலதீவு மக்களும் இதில் பதிவிட்டிருந்தனர். அவர்களின் கருத்துகளை இந்தியர்களையும் இந்தியாவையும் குற்றஞ்சாட்டும் வகையிலும் இனவெறியாகவும் இருந்தது. அவர்களின் இந்தக் கருத்துகள் மிகப் பெரிய சர்ச்சையானது. இதையடுத்து இணையத்தில் பலரும் மாலத்தீவுக்கு எதிராகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மாலத்தீவுக்குச் செல்ல திட்டமிட்ட பலரும் தங்கள் டிக்கெட்களை கேன்சல் செய்து அதிருப்தியைக் காட்டியுள்ளனர்.

இதனால் எக்ஸ் பக்கத்தில் BoycottMaldives என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டானது. மேலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா உள்ளிட்ட பலரும் மாலத்தீவுக்குச் செல்லாமல் இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர்களின் இந்த ட்வீட்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

அக்ஷய் குமார்: அதேபோல பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார், "மாலத்தீவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறிக் கருத்துக்களைக் கூறினர். மாலத்தீவுக்கு அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாட்டிற்கு அவர்கள் இப்படிச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. அண்டை நாடுகளுக்கு நாங்கள் நல்லவர்களாகவே இருப்போம்.

ஆனால், தேவையில்லாமல் இப்படிப் பேசும் போது ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும். நான் மாலத்தீவுக்குப் பலமுறை சென்றிருக்கிறேன், எப்போதும் அதைப் பாராட்டினேன், ஆனால் கண்ணியம்தான் முதலில். முதலில் நாம் இந்தியத் தீவுகளைச் சுற்றிப் பார்ப்போம். நமது சொந்த நாட்டின் சுற்றுலாவை ஆதரிப்போம்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், பலரும் மாலத்தீவு செல்லும் டிக்கெட்டை கேன்சல் செய்து அது குறித்த ஸ்க்ரீன் ஷார்ட்டை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இதனால் BoycottMaldives ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

என்ன பிரச்சினை: இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த ஆண்டு இறுதி வரை நல்ல உறவே இருந்தது. இருப்பினும், கடந்தாண்டு நடந்த தேர்தலில் முகமது முய்ஸு வென்றார். சீனா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த அவர் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், மாலத்தீவில் உள்ள ரேடர்களை பராமரிக்க சில இந்திய வீரர்கள் இருந்த நிலையில், அவர்களையும் வெளியேற்ற உத்தரவிட்டிருந்தார்.

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மாலத்தீவு, அளவில் மிகச் சிறிய நாடு என்ற போதிலும் அது புவிசார் அரசியலில் ரொம்பவே முக்கியமானது. இந்தியாவும் சீனாவும் அங்கே தங்கள் செல்வாக்கை அதிகரிக்க முயன்று வருகிறது. தேர்தலுக்கு முன்பு வரை இந்தியா மாலத்தீவில் தொடர்ந்து முதலீடுகளைச் செய்து வந்தது. ஆனால், தேர்தலில் முய்ஸு வென்றதும் நிலைமை முற்றிலுமாக மாறிப் போனது.

அவர் இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு சீனா ஆதரவாக நிலைப்பாட்டை எடுக்கிறார். இந்தச் சூழலில் தான் அவர் நாளை முதல் 12ஆம் தேதி வரை சீனாவுக்கும் செல்லவுள்ளார். மாலத்தீவு சீனா இடையே இதில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. இந்த நேரத்தில் இந்தியப் பிரதமர் குறித்து மாலத்தீவு அமைச்சர் மோசமான கருத்துகளைக் கூறியுள்ளது தன்னிச்சையானது இல்லை என்றும் ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+