வாழ்ந்தால் பெரியகுளத்தில் வாழனும்.. வாழ்க்கையை வெறுத்தவர்களும் வாழத்தோன்றும்.. அற்புதமான இடங்கள்
தேனி: வாழ்ந்தால் பெரியகுளத்தில் வாழ வேண்டும்.. வாழ்க்கையை வெறுத்தவர்களும் இங்கு வந்தால் வாழத்தோன்றும் அற்புதமான இடங்கள் இருக்கின்றன. மஞ்சளாறு, சோத்துப்பாறை, வைகை அணை, கும்பக்கரை, அடுக்கம், அகமலை என இயற்கையின் கொடை இந்த ஊரை ஓட்டித்தான் உள்ளது.
இயற்கை ஒரு ஊரில் அத்தனை அழகையும் கொட்டி வைத்திருக்கிறது என்றால் அது நிச்சயம் தேனி மாவட்டம் பெரிகுளம் தான்.. தமிழ்நாட்டின் மிக பழமையான நகரங்களில் ஒன்றான பெரியகுளத்தில் இருந்து கூப்பிடும் தூரத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. இன்றைக்கு சென்னை, மதுரை, கோவை, பெங்களூர் என பல்வேறு நகரங்களில் தண்ணீரில் விளையாடும் சறுக்கு விளையாட்டுக்கு பல ஆயிரங்களை கொட்டுகிறார்கள்.. ஆனால் பெரியகுளம் பகுதியில் இயற்கையான வழுக்குப்பாறைகள் ஏராளம்.. அவ்வளவு அற்புதமான இடத்தை விட்டு வந்தவர்கள் இன்றும் சொந்த ஊருக்கு வர ஏங்குவார்கள்.. எத்தனை அருவி இருக்கிறது என்பதை எண்ணவே முடியாது..

பெரியகுளத்தில் இருந்து வெறும் 7 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது கும்பக்கரை அருவி. இந்த அருவியில் ஆண்டின் பெரும்பாலான நாட்கள் தண்ணீர் வரும்.. கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி தண்ணீர் அப்படியே அங்கு தான் வருகிறது.. மூலிகை தண்ணீர் அருவியாக கொட்டுவதால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதுமே வருவார்கள். கொடைக்கானல் வருபவர்கள் தவறவிடக்கூடாத இடங்களில் இதுவும் ஒன்று...

கும்பக்கரை அருவியை போல அடுக்கம் கிராமம் வழியாக கொடைக்கானல் பயணமும் அற்புதமான அனுபவமாக இருக்கும். இப்போது போக முடிகிறதா என்பது தெளிவாக தெரியவில்லை.. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. இருசக்கர வாகனத்தில் மட்டும் போக முடிகிறது. கார்களில் போக முடியாத நிலை சில மாதங்களாக இருக்கிறது. உண்மையில் வாழ்வில் ஒரு முறையாவது பெரியகுளம்-கும்பக்கரை-அடுக்கம்-பெருமாள் மலை வழியாக கொடைக்கானல் போய் வர வேண்டும்.. அங்கு எத்தனை அருவிகள், எத்தனை நீர் வழிப்பாதைகள் இருக்கும் என்பதை எண்ணவே முடியாது. அவ்வளவு அழகான பாதை.. ஆனால் அந்த பாதையில் மாலை நேரத்திற்கு பிறகு போகவே முடியாது.. அப்படி போனால் வனவிலங்குகளிடம் சிக்க வேண்டிய நிலை வரும்..

இதேபோல் மஞ்சளாறு அணையும் அற்புதமான இடம் ஆகும்.. மஞ்சளாறு அணையின் முழு தோற்றத்தை கொடைக்கானல் செல்லும் பாதையில் பலர் பார்த்திருப்பார்கள்.. ஆனால் கீழே போய் பாருங்கள் இப்படி ஒரு இடத்திற்கு போகாதது ஏன் என்பதை நீங்களே உங்களை பார்த்து கேட்பீர்கள். மூங்கிலை காமாட்சி அம்மனை பார்த்துவிட்டு அப்படியே பயணித்தால் அந்த இயற்கை அழகு உங்களை சொக்க வைத்துவிடும். தலையாறு அருவி இங்கு தான் உள்ளது.. ஆனால் போக முடியாது..
அதேபோல் சோத்துப்பாறை அணை சூப்பரான இடம் ஆகும்.. ஆனால் ஏனோ அங்கு உள்ளே செல்ல வனத்துறை அதிகாரிகள் அனுமதிப்பது இல்லை.. அந்த இடம் வேறலெவலில் இருக்கும். கொடைக்கானல் பேரிஜம் ஏரி தண்ணீர் தான் சோத்துப்பாறை அருவிக்கு வருகிறது. சோத்துப்பாறை அணை நீர் குடிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும். சோத்துப்பாறை அணை நிறைந்து தண்ணீர் வழியும் காலத்தில் அல்லது சோத்துப்பாறையில் தண்ணீர் உள்ள காலங்களில் போனால், மாங்காய் தோப்புகள் மற்றும் சுற்றிலும் மலைகளுக்கு நடுவில் குளிக்க முடியும். இங்கு குளிக்க பலருக்கும் பிடிக்கும்.

இதேபோல் சோத்துப்பாறைக்கு மேல் அகமலை என்ற மலைக்கிராமம் இருக்கிறது. இந்த இடமும் அற்புதமாக இருக்கும். இந்த இடத்திற்கு செல்ல ஜீப் வசதி மட்டுமே உள்ளது. இருசக்கர வாகனத்தில் போக முடியும். ஆனால் வனத்துறை அனுமதி பெற வேண்டும். இதேபோல் சோத்துப்பாறை போகும் வழியில் சின்னியம்பாளையம் ஆறு இருக்கிறது. இந்த இடம், யாருமே இல்லாத அற்புதமான ஆற்றுப்பாதையாகும்.. அங்கு போய் குளித்துவிட்டு சாப்பிட்டு வந்தால், திரும்பி வர மனசே வராது..அப்படியான ஒரு இடம் ஆகும்..

இதேபோல் பெரியகுளத்தில் இருந்து சில கிலோ மீட்டர் பயணித்தால் கல்லாறு என்ற ஒரு ஆறு வரும்.. இது இயற்கையான நீச்சல் குளம் என்று சொல்லலாம்.. அவ்வளவு அற்புதமான இருக்கும். மேலிருந்து குதித்து குதித்து பலர் வார இறுதிகளில் மகிழ்வார்கள்.. இந்த இடம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பலருக்கும் பிடித்த இடம் ஆகும்.
இதேபோல் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் வழுக்குப்பாறை மற்றும் வரட்டாறு பகுதிகளில் உள்ள அருவிகளும் அற்புதமான அனுபவத்தை உங்களுக்கு தரும். இதுதவிர எண்ணற்ற அருவி மற்றும் ஆறுகள் பாய்ந்தோடும் இடங்கள் உள்ளன. அந்த இடங்கள் எல்லாம் தேனி பகுதியில் உள்ளவர்களுக்கே இன்னும் தெரியாது. பல இடங்கள் பெரிய அளவில் மனிதர் போகாத இடங்கள் ஆகும். மொத்தத்தில் பெரியகுளத்தில் உள்ள இடங்கள் எல்லாமே வாழ்க்கையை வெறுத்தவர்களும் வாழத்தோன்றும் அருமையான இடங்கள் ஆகும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications