இரவு முழுக்க இந்த 13 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை.. நைட் குளுகுளு கிளைமேட் தான் போங்க!
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயிலைக் குறைக்கும் வகையில் அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதற்கிடையே இரவு 10 மணி வரை தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அதை இந்த மழை சற்று குறைக்கும்.
தமிழ்நாட்டில் கோடைக் காலம் ஆரம்பித்தது முதல் வெயில் படுத்தி எடுத்து வருகிறது. மதிய நேரங்களில் வெளியே செல்ல முடியாத நிலையே நிலவுகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். அதேபோல மே மாதம் வெப்பம் இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சமும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.

தமிழ்நாடு வெப்பம்
அதற்கேற்றார் போல இப்போதே மாநிலத்தில் பல இடங்களில் வெப்பம் உச்சம் தொட்டு வருகிறது. அதேநேரம் அவ்வப்போது நல்ல மழையும் பெய்கிறது. இதைக் கோடை வெயிலுக்குச் சற்று குளிர்ச்சியாக இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 மாவட்டங்களில் மழை
இரவு 10 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோல வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தப் பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கவும் டிராபிக் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தனது எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்றைய வெப்பம்
இது ஒரு பக்கம் இருக்க மாநிலத்தில் பரவலாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இன்றைய தினம் மட்டும் தமிழகத்தில் 5 இடங்களில் வெப்பம் சதமடித்திருந்தது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 103.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. அதேபோல வேலூரில் 102 டிகிரி பாரன்ஹீட், ஈரோட்டில் 101 டிகிரி பாரன்ஹீட், சேலம் மற்றும் திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
வானிலை மையம்
முன்னதாக இன்று வானிலை மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், ""லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டலக் கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்குத் திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்று (29-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னையில் நாளை (30-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications