செங்கல்பட்டில் விட்டு விளாசிய மழை.. சென்னையிலும் கொட்டி தீர்த்துருச்சே! மழை அளவு இவ்வளவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 48.5 மிமீ மழை பெய்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 5.30 மணி வரை, மீனம்பாக்கம் (சென்னை) 26.2, நுங்கம்பாக்கம் (சென்னை) 18.3, கடலூர் (கடலூர்) 17.6, சேலம் - 5.6, கோயம்புத்தூர் - 4.6, புதுச்சேரி - 3.6, பாம்பன் (ராமநாதபுரம்) 2.6, திருச்சிராப்பள்ளி - 2.6, கரூர் பரமத்தி - 7.0, தஞ்சாவூர் - 4.0, ஏற்காடு (சேலம்) 3.0, ஈரோடு - 3.0, பரங்கிப்பேட்டை (கடலூர்) 1.0, கொடைக்கானல் (திண்டுக்கல்) 0.8, திருப்பத்தூர் (திருப்பட்டூர்) 0.2, விஐடி சென்னை (செங்கல்பட்டு) 48.5, எண்ணூர் துறைமுகம் (சென்னை) 42.0, சிதம்பரம் (கடலூர்) 10.0, பெரியகுளம் (தேனி) 1.0 மிமீ மழை பெய்து உள்ளது.

48.5 mm of rain has fallen in Chengalpattu, the maximum in Tamil Nadu

கட்டப்பாக்கம் (காஞ்சிபுரம்) 37.0, விரிஞ்சிபுரம் (வேலூர்) 18.0, திரூர் (திருவள்ளூர்) 14.0, விருத்தாசலம் (கடலூர்) 14.0, சந்தியூர் (சேலம்) 4.5, வம்பன் (புதுக்கோட்டை) 0.5, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 44.0, சத்தியபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 40.0, தரமணி (சென்னை) 36.0, ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை) 33.0, எல்மோயிஸ் கோலப்பாக்கம் (காஞ்சிபுரம்) 21.5, பூந்தமல்லி (திருவள்ளூர்) 18.0, புழல் (திருவள்ளூர்) 17.0, மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 12.0, ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 8.5 மிமீ மழை பெய்து இருக்கிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தகவலில், "இன்று தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28.11.2023 முதல் 02.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+