நவம்பர் 5ம் தேதிக்குள் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாடு நோக்கி நகர வாய்ப்பு!
சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நவ.5ம் தேதிக்குள் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதே நேரம் இது தமிழ்நாடு நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சமீபத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல மெல்ல, சென்னை நோக்கி நகர்ந்து வந்திருந்தது. அதே நேரம் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றிருந்தது. இதனால் சென்னை, திருவள்ளரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும், தெற்கு ஆந்திரா பகுதியிலும் கனமழை பெய்திருந்தது. சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. அலர்ட் காரணமாக ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. குறைந்த நேரத்தில் பெய்த அதிக மழையால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியது.

இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை மற்றும் தெற்கு ஆந்திராவில் கரையை கடந்தது. இப்படி இருக்கையில், தற்போது மீண்டும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நவம்பரம் 5ம் தேதிக்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இது வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்றும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் நவம்பர் இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடையும். சில பகுதிகளில் அதிகனமழைக்கான வாய்ப்பு கூட இருக்கிறது எனவும் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வழக்கமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னைக்கு கண்டம் இருப்பதாக பேச்சு அடிப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் வங்க கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னையை நோக்கி நகர்ந்தால், மேற்குறிப்பிட்ட பேச்சுகள் மேலும் தீவிரமடைந்துவிடும். இப்போது இருக்கும் சூழலில் சென்னை 20 செ.மீ மழை தாங்கும் அளவுக்கு கட்டுமானத்தை கொண்டிருக்கிறது. ஆனால் புயல் மற்றும் காற்றத்த தாழ்வு மண்டலம் சென்னையை தாக்கும்போது நிச்சயமாக 20 செ.மீக்கு அதிகமாகவே மழை பெய்யும். இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும்.
கடைசியாக வங்கக்கடலில் டானா புயல்தான் உருவாகியிருந்தது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கு இடையே கரையை கடந்தது. எனவே தமிழ்நாட்டுக்கு பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications