கனமழை எச்சரிக்கை.. 'அலர்ட்' ஆன சென்னை மாநகராட்சி.. பூங்காக்களை மூட அதிரடி உத்தரவு!
சென்னை: சென்னையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்படும் வரை அனைத்து பூங்காக்களையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பருவமழை வெளுத்து வாங்குகிறது. இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக் கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் தற்போது மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை விட்டு விட்டு கொட்டி வருகிறது.

இதனால் தாழ்வான பல இடங்களிலும் தண்ணீர் குளம் போல தேங்கியது. தேங்கிய மழை நீரை உடனுக்கு உடன் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலன இடங்களில் வெள்ள நீர் வழிந்தோடியது. இன்று மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனிடையே இன்று முதல் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 2-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 27 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 3 ஆம் தேதி அன்று புயல் சின்னமாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் மேலும் ஒரு வாரங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், மழையை எதிர்கொள்ள அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அனைத்து பூங்காக்களையும் மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை திரும்பப்பெறப்படும் வரை அனைத்து பூங்காக்களையும் மூட வேண்டும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications