எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? சென்னையில் எப்படி இருக்கும்? வானிலை மைய இயக்குனர் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்தும் சென்னை வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது பற்றியும் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறிய விவரத்தை பார்க்கலாம்.
மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னையில் பெய்த பெருமழை ஒட்டுமொத்த நகரையே வெள்ளத்தில் மிதக்க வைத்தது. டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை மாநகரமே தத்தளித்தது. மழை விட்ட பிறகும் வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை முழுமையாக திரும்ப கிட்டத்தட்ட ஒருவார காலம் ஆனது. மழை பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், சென்னையில் இன்று மழை பெய்ய தொடங்கியது.

விட்டுவிட்டு லேசான மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. எனினும், சென்னையில் கடந்த ஒரு வாரமாக மழையின்றி பனி அதிகரித்தது. இந்த நிலையில், இன்று மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் சென்னையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 5 நாட்கள்: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 5 தினங்களுக்கு தென் தமிழக பகுதிகளில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கையை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவடடங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 16 ஆம் தேதி புதுக்கோட்டை ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் டெல்டா மாவட்டங்கள், மதுரை விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டஙக்ளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் எப்படி?: 17 ஆம் தேதி கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களீல் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் அரியலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 1
8 ஆம் தேதி தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு நகரின் சிலபகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications