100 டிகிரி வெயிலுக்கு நடுவில்.. இடி, மின்னலுடன் மழை! 6 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், இன்னும் 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடங்கிய பருவமழை, இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையுடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சில நாட்களில், காலை 10 மணி வரை கூட பனி மூட்டம் பல பகுதிகளில் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதி தொடங்கி தற்போதுவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

நேற்று மட்டும் சுமார் 14 நகரங்களில் வெயில் 100 டிகிரியை கடந்திருக்கிறது. அதாவது, ஈரோட்டில் 106 டிகிரி ஃபாரன்ஹீட், கரூர் பரமத்தியில் 105, சேலம், வேலூர், தருமபுரியில் 104, திருச்சி 103, கோவை, மதுரை விமான நிலையம், திருத்தணியில் 102 டிகிரி, நாமக்கல், திருப்பத்தூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் 106 டிகிரி வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 102 -106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டிருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் ஓரளவு லேசான மழையும் பெய்திருக்கிறது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் அடுத்த 2 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications