அடுத்த 2 மணி நேரம்.. குடையை மறந்துடாதீங்க! தஞ்சை, ராமநாதபுரம் உள்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியிருந்த நிலையில், இன்று அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வெயில் அடித்து வருகிறது. கோடைக்காலம் வந்துவிட்டதோ என்று சொல்லும் அளவுக்கு வெயில் கொளுத்தி எடுக்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பனி நிலவினாலும், மதிய நேரத்துக்கு பின் வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக நாளை தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் இன்று அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் இன்று காலை 10 மணிக்குள், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்பத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications