சென்னையில் 2 நாளைக்கு மழைக்கு சான்ஸ்.. தமிழகம் முழுக்க ஒரு வாரத்துக்கு தொடரும்.. வெதர் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் ஜனவரி 4 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மதியம் வரையில் பரவலாக லேசான மழை பெய்தது. சிவகங்கை, விழுப்புரம், ஈரோடு, ராணிப்பேட்டை, வேலூர், நெல்லை, மதுரை, கடலூர், திருவண்ணாமலை, அரியலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததது. அதிகபட்சமாக திருப்புவனத்தில் 8 செமீ மழை பெய்துள்ளது. ஈரோடு அம்மாபேட்டை, விழுப்புரம் அவலூர்பேட்டை, ராணிப்பேட்டை ஆற்காடில் தலா 5 செமீ மழை பதிவாகியது. வாலாஜா, ராணிப்பேட்டையில் தலா 4 செமீ மழை பதிவாகியது.

நேற்று தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. ஊத்து பகுதியில் 4 செமீ மழையும், நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் வரும் ஜனவரி 4 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் வரும் 4 ஆம் தேதி வரை ஒரீரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுவை காரைக்காலிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications