அடுத்த 3 மணி நேரம்.. இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை வெளுக்க போகுதாம்.. சென்னை வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தேனி மற்றும் நீலகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கிவிட்டது. கடந்த மாத துவக்கத்தில் சென்னையில் பேய் மழை கொட்டியது. பிறகு 16, 17 ஆகிய தேதிகளில் நெல்லை , தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெருமழை கொட்டி தீர்த்தது. சென்னையில் பெய்த மழையால் மாநகரமே வெள்ளத்தில் சில நாட்களுக்கு மிதந்தது.

இந்த பாதிப்பில் இருந்து சென்னை மீண்டு வந்து கொண்டிருந்த நேரத்தில் தென் மாவட்டத்தில் பெய்த மழை நெல்லை, தூத்துக்குடியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்தது. தற்போதுதான் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டும் வரத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தில் உள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் இன்று நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
காலை நேரத்தில் பனிமூட்டம் நிலவும் என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது காலை 10 மணி வரை, செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications