சுடச்சுட சாப்பாடு.. சென்னை மக்களுக்கு விநியோகிக்கும் மாநகராட்சி.. 86 உணவுக் கூடங்களின் விவரம் இங்கே!
சென்னை: கனமழை காரணமாக, சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களிலும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 86 பொது உணவுக் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இன்று மதியம் தக்காளி சாதம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னையின் பிரதான சாலைகள், குடியிருப்புகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை, மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் உணவுக் கூடங்களில் உணவு சமைத்து, பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் 86 பொது சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பொது உணவுக் கூடத்தில் இன்று காலை முதலே உணவு தயாரிக்கப்பட்டு வந்தது. இன்று மதியம் தக்காளி சாதம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல, சென்னை மாநகராட்சி முழுவதும், அனைத்து வார்டுகளிலும், உணவு சமைக்கப்பட்டு, மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் மேற்பார்வையில் பொதுமக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி சார்பில் மண்டலம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள உணவு கூடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உணவு தேவைப்படுபவர்கள் இங்கு தொடர்பு கொண்டால் உணவு வழங்கப்படும். 3 வேளையும் உணவு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications