Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேளச்சேரியில் "ஊசலாடும்" 2 உயிர்.. அதுவும் 50 அடி பள்ளத்தில் ஐயோ.. திருமாவை பார்த்ததுமே கதறிய உறவுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வேளச்சேரி பகுதியில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணி 3வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.. பள்ளத்தில் சிக்கிய 2 பேரை மீட்க முடியாமல், போராடி கொண்டிருக்கிறது மீட்புக்குழு.. இதனால், வேளச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை உலுக்கியெடுத்து சென்றுவிட்டது இந்த மிக்ஜாம் புயல்.. நேற்று முன்தினம் சென்னை வேளச்சேரியில் பெட்ரோல் பங்க் அருகே, திடீரென 50 அடிப்பள்ளம் ஏற்பட்டுவிட்டது.. அந்த பள்ளத்தில், அங்கிருந்த அடிக்குமாடி கட்டிடம் ஒன்று திடீரென தரையில் இறங்கிவிட்டது.. கண்டெய்னர் சரிந்து விழுந்துவிட்டதால் இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது..

Chennai Flood and 2 workers in 50 feet ditch in Velachery due to Chennai Cyclone and Thirumavalavan visits

விபத்து ஏற்பட்ட இடத்துக்கு தீயணைப்பு படை வீரர்கள், மீட்புப் படையினர் விரைந்தனர். இந்த மிகப்பெரிய விபத்தினால், முதலில் 8 பேர் அதில் சிக்கியிருப்பதாக கூறப்பட்டது. பிறகு 5 பேர் சிக்கியதாக சொன்னார்கள்..

சிறுகாயங்கள்: எனினும், இடிபாட்டில் சிக்கியவர்களை சிறு காயங்களுடன் மீட்டுவிட்டார்கள். எனினும் மேலும் 2 பேர் சிக்கியிருக்கிறார்கள். அவர்களை இப்போதுவரை மீட்க முடியவில்லை.. இன்றுடன் 3வது நாளாகிறது. அவர்களை மீட்கும் பணி இன்னமும் தொடர்கிறது.

நேற்றிரவு தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு ஆகியோருடன் சம்பவ இடத்தை பார்வையிட வந்தார்.

திருமாவளவன்: அப்போது, திருமாவை பார்த்ததுமே, பள்ளத்தில் சிக்கியிருப்பவர்களின் உறவினர்கள் கதறி கதறி அழுதார்கள்.. இதனால் நிலைகுலைந்து போன திருமாவளவன், அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்.. சிக்கியவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று உறவினர்கள் திருமாவளவனிடம் கோரிக்கை வைத்தனர்..

Chennai Flood and 2 workers in 50 feet ditch in Velachery due to Chennai Cyclone and Thirumavalavan visits

பிறகு, மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம், நடந்து வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.. பிறகு திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, பள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவேண்டும்.. அத்துடன் அரசு வேலை வழங்க வேண்டும்" என்றார்.

வேளச்சேரி: வேளச்சேரி 5 பர்லாங் சாலையில் எரிவாயு நிலையத்தின் அருகே ஒரு தனியார் நிறுவனம் கட்டுமான பணிகளை செய்து வருகிறது.. அப்பார்ட்மென்ட் கட்டுவதற்காக இந்த கட்டுமான வேலை நடந்ததாக சொல்கிறார்கள்.. இதற்காகவே இந்த 40 அடி பள்ளம் தோண்டப்பட்டிருக்கிறது.. இந்த பள்ளத்தின் பக்கத்திலேயே, ஊழியர் சரக்கு பெட்டகத்தில் செய்யப்பட்ட தற்காலிக அறை இருந்தது..

நேற்று முன்தின காலை பலமான மழை பெய்யும்போது, இந்த அறைதான் திடீரென சரிந்து 50 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.. அப்போது, மண் சரிந்து, இந்த சரக்கு பெட்டக அறை மீதே விழுந்துள்ளது.. இதனுள்தான் ஊழியர்கள் சிக்கியிருக்கிறார்கள்.

ஆனால், உண்மையிலேயே எத்தனை அடி பள்ளம் என்று தெரியவில்லையாம்.. சிலர் 60 அடி என்கிறார்கள்.. சிலர் 70 அடி, 40 அடி என்கிறார்களாம். நீரை உறிஞ்சி எடுத்தால்தான், மீட்க முடியும் என்பதால், இந்த வேலை இரவு பகலாக நடந்து கொண்டிருக்கிறது.

பரபரப்பு: நீர்முழுகி கருவிகள் மூலமாக தேடும் பணி நடக்கிறது. ஆனால், தண்ணீர் கலங்கிய நிலையில் இருந்ததால் அவர்களை உடனடியாக மீட்க முடியயாமல் இருந்தது. இப்போதும் இதே முயற்சி நடந்து வருகிறது. இந்த பகுதியிலேயே ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன..

மீட்பு பணிகளை பார்க்கவும், பள்ளத்தை பார்க்கவும் அந்த பகுதியில் ஏராளமானோர் கூடி வருகின்றனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். கட்டிப்பகுதிக்கு 5 அடிக்கு முன்பேயே பொதுமக்கள் தடுக்கப்பட்டுவிடுகிறார்கள்.. ஆனாலும், கூட்டம் கூடிக்கொண்டேயிருக்கிறது..

3வது நாளாக மீட்புப்பணி நடைபெற்று வரும் நிலையில், உள்ளே சிக்கியுள்ளவர்களின் உறவினர்கள் கவலையுடன் உள்ளார்கள்.. இதனால் அந்த பகுதியே மிகவும் பரபரப்பாகவும், பதற்றமாகவும், கவலையாகவும் காணப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+