சென்னையில் இருக்கீங்களா? உங்ககிட்ட பைக் இருக்கா? இப்படி மட்டும் செஞ்சடாதீங்க.. நோட் பண்ணுங்க
சென்னை: மழை பெய்து ஓய்துள்ள நிலையில், வாகனங்களை இயக்குவது குறித்து சில அறிவுறுத்தல்களை பொறியாளர்கள் வழங்கி வருகிறார்கள்.
சென்னையை ஒரு புரட்டு புரட்டிபோட்டுவிட்டு போய்விட்டது இந்த நிக்ஜாம்.. சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் காணப்பட்டால், வாகனங்களை நகர்த்தி கொண்டு செல்ல முடியவில்லை.. இதனால், வாகன ஓட்டிகள், வாகனங்களை நடுரோட்டிலேயே விட்டுவிடவும் முடியாமல், வாகனங்களுடன் செல்லவும் முடியாமல், நிலைகுலைந்து போய்விட்டனர்.

பைக்குகள்: ஆயிரக்கணக்கான பைக்குகள், கார்கள், நீரில் மூழ்கிவிட்டன.. வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார்களும், தண்ணீரில் அடித்து செல்வதை கலங்கிப்போய் பார்த்து கொண்டு நின்றனர் அதன் உரிமையாளர்கள். தண்ணீர் புகுந்து ஆயிரக்கணக்கான பைக்குகள், கார்கள் சேதமாகி உள்ளன..
அதேபோல, கடந்த 2 நாட்களாகவே மழைநீரில் நனைந்தபடியே வாகனங்கள் இருந்ததால், அதனுள் மழைநீர் புகுந்துவிடவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், வாகனங்களை இயக்குவது குறித்து சில அறிவுறுத்தல்களை தொழில் நுட்ப வல்லுநர்கள் தருகிறார்கள்.
கார்கள்: கார்கள், பைக்குகள் எதுவானாலும், உடனே ஸ்டார்ட் செய்யக்கூடாதாம்.. வாகனங்களை மெக்கானிக் ஷெட்டுக்கு கொண்டுவந்து, அந்த வாகனத்தில் புகுந்துள்ள நீரை சுத்தம் செய்ய வேண்டும்.. முக்கியமாக டூ வீலர்களை பொறுத்தவரை, பெரிய வாகனம் என்றால் தைரியமாக ஓட்டலாம்.. ஆனால், இதுபோன்ற மழை நேரங்களில் ஆக்டிவா, ஸ்கூட்டி போன்ற வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்க சொல்கிறார்கள்..
TVS எக்சல், ஸ்கூட்டி, போன்ற 2 ஸ்ட்ரோக் வண்டிகளில், இன்ஜின் தரையோடு தரையாக இருக்கும் என்பதால், இவைகளில் எளிதில் தண்ணீர் புகுந்துவிடும். அதனால், இன்ஜினில் எர்த் கிடைக்காமல் சூடாகி, சாலைகளில் பயங்கர சத்தத்தையும் எழுப்பிவிடும்.. எனவே, ஸ்கூட்டி, ஆக்டிவா, பெப் போன்ற வண்டிகளில் பேட்டரியையும் அடிக்கடி சோதித்து பார்க்க வேண்டும்.
மழைநீர்: அப்படியே மழைநீரில் செல்வதானாலும், ஒரு அடிக்கு மேல் தண்ணீர் சாலையில் இருந்தால் சைலென்சருக்குள் போய்விடும். அதனால், தண்ணீரின் அளவை கவனித்தே ஓட்ட வேண்டும். முக்கியமாக, தேங்கியிருக்கும் தண்ணீரில் சைலென்சர் நனையாதவரை ஓட்ட வேண்டும்.
ஒருவேளை சைலன்ஸர்கள் மூழ்கும்படி நேர்ந்தால், எந்த வேகத்தில் வண்டியுள்ளதோ, அதே வேகத்தில் ஆக்சிலேட்டரை தந்துகொண்டிருந்தாலே போதும். இல்லாவிட்டால், சைலென்சர் வழியாக தண்ணீர் என்ஜினில் புகுந்துவிடும். அதாவது ஆக்ஸிலேட்டரை வேகமாக திருக வேண்டும். கியர் வண்டியாக இருந்தால் 2-வது அல்லது 3-வது கியரில் செல்ல வேண்டும்..
தண்ணீர்: அப்படியே தண்ணீர் புகுந்துவிட்டாலும், மெக்கானிக் கடைக்கு கொண்டு போகவேண்டுமே தவிர, நாமாகவே ஸ்டார்ட் செய்ய கூடாது.. காரணம், என்ஜினுள் எண்ணெய்யும், தண்ணீரும் கலந்துவிடும்.
மழையில் வாகனம் நீண்ட நாள் நின்றுவிட்டால், 30 நிமிடமாவது ஸ்டார்ட் செய்து, அதே இடத்தில் என்ஜினை ஓடச்செய்வது நல்லது. அப்போதுதான், என்ஜின் பாகங்கள் உட்பட அனைத்து பாகமும் சூடாகும்..!
மழைக்காலம்: மழையில் திடீரென்று வண்டி நின்று விட்டாலும், உடனே வேகமாக ஸ்டார்ட் செய்யக்கூடாது.. பொறுமையாக, ஏர் ட்யூப், சைலன்சர், ஸ்டார்ட்டிங் ப்ளக் அடாப்டர் போன்றவற்றில் தண்ணீர் ஏறியிருக்கிறதா என்பதை பொறுமையாக பார்க்க வேண்டுமாம்.. ஆக மொத்தம் மழைக்காலம் தொடங்கிவிட்டதால், என்ஜினின் ஆயில் உட்பட வாகனங்களின் கண்டிஷனை அடிக்கடி சரிசெய்து கொள்ளவேண்டியது அவசியம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications