தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் நல்ல மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் குட்நியூஸ்
சென்னை: தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதேபோல் தஞ்சை, மயிலாடுதுறை, நெல்லை போன்ற மாவட்டங்களில் பரவலாக கடந்த இரண்டு நாட்களில் நல்ல மழை பெய்துள்ளது.

இதேபோல் கன்னியாகுமரி, திருச்சி, கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, தென்காசி, திருப்பூர், கடலூர் மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களிலும் கணிசமாக நல்ல மழை பெய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில், மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 11-ந் தேதி சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்கூறிய தினங்களில் மேற்கண்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.
நேற்று மதியம் 1.15 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி நெல்லை மாவட்டம் நாலுமுக்கு, கோவை மாவட்டம் சோலையாறு ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 11 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. கோவை வால்பாறை, நெல்லை ஊத்து ஆகிய பகுதிகளில் தலா 9 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.
தஞ்சை கீழ் அணைக்கட்டு, மயிலாடுதுறை மணல்மேடு, நெல்லை காக்காச்சி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. மேலும் கன்னியாகுமரி, திருச்சி, கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, தென்காசி, திருப்பூர், கடலூர், மதுரை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் 1 முதல் 5 செ.மீ மழை அளவு பெய்துள்ளது" இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications