சென்னையில் நாளை வானம் தெரியாது.. குளிர் அதிகரிக்கப்போகுதாம்.. மக்களே கவனம்!
சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை (நாளை) அதிகாலையில் கடும் பனிமூட்டம் இருக்கும். இதனால் வானம் தெரியாது எனவும், பொதுமக்களை குளிர் ஆட்டுவிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல இடங்களில் தற்போது மழை இல்லை. வடகிழக்கு பருவமழை குறைந்துள்ள நிலையில் குளிர் அதிகரித்துள்ளது. குறிப்பாக மலை பிரதேசங்களில் மாலை முதல் காலை வரை குளிர் அதிகமாக உள்ளது. இது டிசம்பர் மாதம் வழக்கமான ஒன்று தான்.

அதேபோல் மலை பிரதேசங்களை தவிர தமிழகத்தில் பிற மாவட்டங்களில் குளிர் என்பது நிலவி வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் இரவில் பனிப்பொழிவு உள்ளது. இந்த பனிப்பொழிவு அதிகாலை வரை நிலவுகிறது. இதனால் குளிரால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் சென்னையில் நாளை அதிகாலையில் கடும் பனிமூட்டம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வானம் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது. அதுபற்றி வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் வானம் பனிமூட்டமாக காணப்படும் வாய்ப்பு உள்ளது. அதிகாலையில் எதிரே வரும்ஆட்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருக்கலாம். அதேபோல் குளிரும் இருக்கும். சென்னையின் சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 23 டிகிரி செல்சியஸாக நிலவ வாய்ப்புள்ளது. அதேபோல் அதிகாலை வேளைக்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாக இருக்க வாய்ப்புள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications