உச்சி சூடாகப்போகுது.. அடுத்த 6 நாள் மழையே இருக்காதாம்! 13 ஆம் தேதி குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "பிப்ரவரி 7 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். பிப்ரவரி 13 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன் அறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 31 - 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 22 - 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டி மீட்டரில்): ஏதும் இல்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதும் இல்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும். இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்க உள்ளது. இந்த சூழலில் கோடை காலத்தை நினைவூட்டும் வகையில் தற்போதே பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் அடுத்த 6 நாட்கள் தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பது சற்று ஆறுதலை கொடுத்தாலும் சொன்னதுபோல் அன்றைய தினம் நடக்குமா என்ற சந்தேகம் எழாமல் இல்லை.












Click it and Unblock the Notifications