வானிலையை கணிப்பதில் ஏன் தவறு ஏற்படுகிறது? பசிபிக் கடலை உதாரணம் காட்டிய வானிலை மைய இயக்குநர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வானிலையை கணிப்பதில் ஏன் தவறு ஏற்படுகிறது என்பதை சென்னை வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலசந்திரன் விளக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பல அம்சங்களை கொண்டதால் வானிலையை கணிப்பதில் சில நேரம் தவறு ஏற்படுகிறது.
உள்முகம், வெளிப்புறம் கொண்ட வானிலையை கணிப்பதில் சில சமயம் தவறு ஏற்படத்தான் செய்கிறது.

weather rain tamil nadu

காற்றின் திசை மாறும் போது அதன் தன்மை மாறுகிறது. பசிபிக் கடலில் உருவான புயலை கணிப்பதில் கூட தவறு நடந்துள்ளது. பெஞ்சல் புயல் திசையை சரியாக தான் கணித்தோம். ஆனால் திறனில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. உலகம் முழுக்கவே வானிலை கணிப்புகளில் தவறுகள் ஏற்படத்தான் செய்கின்றன. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அட்லாண்டிக் கடல் பகுதியில் புயல் கரையை கடந்த போது கணிப்புகள் தவறி இருந்தது.

காலநிலை மாற்றம் காரணமாக வானிலை நிலவரங்களை துல்லியமாக கணிப்பதில் சிக்கல் உள்ளது. வானிலை கணிப்புகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். தொழில்நுட்பம் மட்டுமின்றி புயலை கணிக்கும் அறிவியல் அம்சமும் முழுமையாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேரிடர்களை சரியாக கணித்து மக்களை காக்க முடியாததால் பேரிடர்களை கணிக்க தனி துறையை உருவாக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி, நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது பெஞ்சல் புயல் மகாபலிபுரம்- புதுவை இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்ட நிலையில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சேதமானது வானிலை மையத்தால் கணிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்தமானில் 15 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மேலும் தற்போது வங்கக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.

இந்த நிலையில் இந்த மழையானது தென் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று இன்று சென்னை, செங்கல்பட்டு மற்றும் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள் உள்பட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளையும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவது குறித்து வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, மெல்ல நகர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, இலங்கை கடலோரத்தை ஒட்டிய, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவியது.

இன்று, மேற்கு, வடமேற்கு திசையில், தமிழகம், இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, மீண்டும் தீவிரமடையும். தமிழகத்தின் 35 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அநேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்யவும், டிச., 17 வரை மிதமான மழை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும், வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 35 மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை கொட்டி வரும் நிலையில் சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அது போல் சென்னை- வேளச்சேரி, நீலாங்கரை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+