சிக்கிய 2 பேர்.. வேளச்சேரி கட்டட விபத்தில் கைதான மேற்பார்வையாளர்கள்! பின்னணி என்ன? பரபர தகவல்
சென்னை: சென்னை வேளச்சேரி அருகே மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக கடந்த 4ம் தேதி திடீரென்று கட்டடம் ஒன்று 50 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் சிக்கிய 8 பேரில் 6 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 பேர் இறந்தனர். இவர்களின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில் கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணாக சென்னையில் கடந்த 3ம் தேதி முதல் 4ம் தேதி வரை இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. விடியவிடிய கொட்டிய கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே தான் கடந்த 4ம் தேதி சென்னை ரேஸ்கோர்ஸ் சாலை அருகே கிண்டி ஐந்து பர்லாங்க் ரோட்டில் கியாஸ் நிரப்பும் நிலையம் உள்ளது. இதன் அருகே கட்டுமான பணிக்காக 50 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்ப்பட்டு இருந்தது. இதன் அருகே கியாஸ் நிரப்பும் நிலையத்துக்கான கட்டடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் தங்கும் வகையில் கன்டெய்னர் அறை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தான் கடந்த 4ம் தேதி பெய்த கனமழையின்போது ஏற்பட்ட மண் சரிவால் கன்டெய்னர் அறை மற்றும் கியாஸ் நிரப்பும் நிலையத்தின் கட்டடம் ஆகியவை 50 அடி பள்ளத்தில் விழுந்தது. அதோடு மழை நீரும் பள்ளத்துக்குள் அருவிபோல் கொட்டியது. இந்த விபத்து காரணமாக மொத்தம் 8 பேர் பள்ளத்தில் சிக்கிய நிலையில் 6 பேர் மீட்கப்பட்டனர்.
மாறாக சைட் என்ஜினியரான வேளச்சேரி ஜெயசீலன் (29), கியாஸ் நிரப்பும் நிலையத்தின் ஜெனரேட்டர் அறையில் இருந்த ஊழியரான வேளச்சேரி விஜயநகரை சேர்ந்த நரேஷ் (24) உள்ளிட்டோர் மாயமாகினர். இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் தான் 5 நாள் மீட்பு பணியை தொடர்ந்து இன்று இருவரின் உடலும் மீட்கப்பட்டது. அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளத்தில் இன்னும் வேறு யாராவது சிக்கி உள்ளனரா? என்பது பற்றி மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே தான் இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் அடித்தளத்தை வலுவாக அமைக்காமல் கட்டுமானப் பணி மேற்கொண்டதாலேயே இந்த விபத்து நடந்திருப்பதாக அறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தான் தற்போது 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது கட்டுமான பணிக்காக 50 அடி பள்ளத்தை தோண்டிய தனியார் கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர்களான எழில், சந்தோஷ் ஆகியோரை கிண்டி போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். புயல் எச்சரிக்கை விடுத்தும் கூட தொழிலாளர்களை ஏன் தங்க வைக்கப்பட்டனர். அதோடு பள்ளத்தை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications