மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த மழை.. 8, 9 ஆம் தேதி சம்பவம் இருக்கு.. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் வரும் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் மீண்டும் கனமழை (Chennai Weather Alert) பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் சென்னையில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவை, காரைக்காலில் வரும் 10 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வரும் 8 ஆம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. மாலைக்கு பிறகு இரவில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் வரும் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

அடுத்த ஒரு வார மழை அப்டேட்
இதேபோன்று சென்னையில் இன்றும், நாளை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 9 ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* தமிழகம், புதுவை, காரைக்காலில் வரும் 10 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
* வரும் 8 ஆம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* வரும் 9 ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* சென்னையில் இன்றும், நாளையும் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications