இதெல்லாம் அழிவிற்கான அறிகுறி! தாங்க முடியாத வெயிலுக்கு இடையே நடந்த ஷாக் சம்பவம்! உடம்பே சிலிர்க்குதே
டெல்லி: டெல்லியில் நிலவும் வானிலை.. உலகம் எங்கே மிக மோசமான வானிலையை நோக்கி.. மிக மோசமான காலநிலை மாற்றத்தை நோக்கி செல்கிறதோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. காலநிலை மாற்றம் கையை மீறி செல்கிறதோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
இந்தியாவில் மிக நீண்ட வெப்ப அலை நிலவுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு மிக நீண்ட வெப்பநிலை இந்த வருடம்தான் சென்னையில் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக டெல்லியில் வெப்பச்சலனம் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி தலைநகர் பிராந்தியத்தில் பெரும்பாலான இடங்களில் கடுமையான வெப்ப அலை நிலவுகிறது. அடுத்த 1 வாரத்திற்கு டெல்லியில் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலைகள் இருக்கும் என்று வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இரவு நேரங்கள் கூட கடுமையாக சூடாக இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
இன்று டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று கணித்துள்ளது.
மரணம்: இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று டெல்லியில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கே கடுமையான வெயில் காரணமாக.. மரத்தில் தொங்கும் வவ்வால்கள் சூடு தாங்காமல் பலியாகி கீழே விழுந்து உள்ளன. வெப்பம் தாங்காமல் பலியாகி அந்த வவ்வால்கள் கீழே விழுந்துள்ளன.
டெல்லியில் நிலவும் வானிலை.. உலகம் எங்கே மிக மோசமான வானிலையை நோக்கி.. மிக மோசமான காலநிலை மாற்றத்தை நோக்கி செல்கிறதோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
காலநிலை மாற்றம்: தீவிரவாதம்.. சர்வாதிகாரம்.. வேலையின்மை.. வறுமை ஆகியவை உலகின் மிகப்பெரிய பிரச்சனைகளாக தோன்றினாலும், அதை விட பெரிய பிரச்சனை ஒன்றை நாம் சத்தமின்றி எதிர்கொண்டு வருகிறோம். அதுதான் காலநிலை மாற்றம்!
உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது.
ஐநாவும் இந்த காலநிலை மாற்றம் குறித்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து இருக்கிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம். இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில மாதங்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை. அந்த அளவிற்கு உலகம் முழுக்க காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது.
It’s so hot in Delhi that bats are dropping dead from trees. pic.twitter.com/OmYXlxsllV
— Radhika Govindrajan (@r_gov11) June 18, 2024
முக்கியமாக 2024 மிக அதிகமான வெப்பமான ஆண்டாக இருக்கும் என்பதால், பெர்மாஃப்ரோஸ்ட் கரைந்து இறுதியில் ஸோம்பி வைரஸ்களை வெளியிடும் ஆபத்து முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது என்று பிரான்சின் தெற்கில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இப்படிப்பட்ட நிலையில்தான் டெல்லியில் கடுமையான வெயில் காரணமாக.. மரத்தில் தொங்கும் வவ்வால்கள் சூடு தாங்காமல் பலியாகி கீழே விழுந்து உள்ளன. வெப்பம் தாங்காமல் பலியாகி அந்த வவ்வால்கள் கீழே விழுந்துள்ளன.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications