சென்னையை சுற்றி வளைக்கும் மேகங்கள்.. இரவில் சம்பவம் இருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் போட்ட ட்வீட்
சென்னை: சென்னை புறகர் பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், அன்காபுத்தூர் பகுதிகள் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்ல்பட்டு மாவட்டங்களை பொறுத்தவரை சென்னை சிட்டியை மேகங்கள் சுற்றி வளைத்துள்ளன என்றும், இன்று இரவு சென்னையில் தீவிர மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தென்மேற்கு பருவமழை கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரம் அடைந்து கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் அவ்வப்போது பெய்து வருகிறது.

தென் மேற்கு பருவமழை: தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக இரவு நேரங்களில் மழை பெய்வது பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகாமக இருப்பதும் என வானிலை மாறிக்கொண்டே இருந்தது. நேற்று அதிகாலையில் சென்னையில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
பலத்த காற்று மற்றும் இடியுடன் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. ஒரு மணி நேரம் கனமழையாக நீடித்த இந்த மழை பின்னர் மிதமாக பெய்தது. இதனால், சென்னையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும் மழை எங்க்கும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெய்யவில்லை. எனினும் வானிலை ஆய்வு மையம் இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
பிரதீப் ஜான் ட்வீட்: இந்த நிலையில், சென்னையை மேகங்கள் சுற்றியுள்ளதாகவும், இன்று இரவு சென்னையில் தீவிர மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:- "தமிழகத்தின் பல மாவட்டங்களில் தீவிர மழைக்கான (ரெட் தக்காளி) மேகங்கள் திரண்டுள்ளன.
இன்று இரவு சென்னையில் மழை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்ல்பட்டு மாவட்டங்களை பொறுத்தவரை சென்னை சிட்டியை மேகங்கல் சுற்றி வளைத்துள்ளன. இன்று மாலை வட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான பொன்னேரி - மீஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இரவு நேரத்தில் சென்னையின் பிற இடங்களில் மழை இருக்க கூடும்" என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஒரு வார வானிலை அப்டேட்: முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம். மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் எப்படி?: 12 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 செய்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications