முதலில் பள்ளிகளுக்கு நோ லீவ்.. முக்கால் மணி நேரத்தில் மாறிய முடிவு.. சென்னையில் குழம்பிய பெற்றோர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மற்றும் புறநகரில் நேற்று இரவில் இருந்து விடிய விடிய, விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் மழை தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேவேளையில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என முதலில் அறிவிப்பு வெளியானது. ஆனால், அடுத்த முக்கால் மணி நேரத்தில் விடுமுறை என அறிவிக்கப்பட்டது. இப்படி குழப்பமான அறிவிப்பால் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சிரமம் அடைந்தனர்.

தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் மேகம் சூழ்ந்து சென்னை நகரம் இருளாகியது. பின்னர் இரவு 7 மணியளவில் மழை கொட்டத் தொடங்கியது. சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், வடபழனி, என பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்தது.

chennai rain school leave

நேற்று இரவு முதல் இன்று காலை வரை விட்டு விட்டு மழை தொடர்ந்து பெய்தது. விடிய விடிய மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. தொடர்ந்து இன்றும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கனமழை பெய்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுமா? என பெற்றோர்கள் எதிர்பார்த்தனர். காலையில் இருந்தே லீவ் தொடர்பான அறிவிப்பு எதுவும் வருமா என்ற எதிர்பார்ப்பு பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் ஏற்பட்டது.

அப்போது பள்ளிகள் இன்று வழக்கம் போல இயங்கும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்ததாக செய்திகள் வெளியாகின. இதைப்பார்த்ததும் இப்படி மழை பெய்யும் போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லேயே என நினைத்துக்கொண்ட பெற்றோர்கள் பலரும் வேகவேகமாக தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராகினர். காலையிலேயே உணவு ரெடி செய்து, பள்ளிகளுக்கு கிளம்ப தயாராக இருந்த நேரத்தில், சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக அறிவிப்பு வெளியானது. சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவித்தார்.

chennai rain school leave

முதலில் லீவ் இல்லை என அறிவித்துவிட்டு அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக லீவ் என அறிவிப்பு வந்ததால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இனி வரும் நாட்களிலாவது இப்படி குழப்பமான அறிவிப்பு இல்லாமல் தெளிவான அறிவிப்பை நன்கு கலந்து ஆலோசித்து வெளியிட வேண்டும் என்றும் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

விடுமுறையை கொஞ்சம் முன்னாடியே அறிவித்து இருக்கலாம் என்றும் பெற்றோர்கள் கூறினர். ஏனென்றால் முதலில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்ற அறிவிப்பு வந்ததும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றனர். சிலர் பள்ளிக்கு அருகில் சென்ற போது தான் விடுமுறை என்றே தெரியவந்தது என்கிறார்கள். இதனால் பள்ளி வரை சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பியதாகவும் பெற்றோர்கள் கூறினர்.

இன்னும் சிலர் பைக்கில் குடையை பிடித்தபடியே பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து சென்றதாகவும், பின்னர் நடு ரோட்டில் சிலர் தெரிவிக்கும் தகவலை வைத்து வீடு திரும்பியதாகவும் கூறினர். சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும், கல்லூரிகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே அறிவித்துள்ளார். அதேவேளையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக நேற்று சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது. தொடர்ந்து இன்று காலையில் 3 மணி நேர அப்டேட் வெளியிட்ட சென்னை வானிலை மையம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் காலை 10 மணி வரை மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியிட்டது.

ஏற்கனவே விடிய விடிய மழை பெய்ததாலும், இன்றும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்ததாலும், தொடர்ந்து காலை 10 மணி வரையிலான அப்டேட்டிலும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டிருந்ததால் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கலாம். எனினும் குழப்பம் ஏதும் இன்றி
நன்கு கலந்து ஆலோசித்து வெளியிட வேண்டும் என்றும் பெற்றோர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+