டிட்வா புயல்.. இலங்கையில் சிக்கித்தவிக்கும் 150 தமிழர்கள்.. இண்டிகோ விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு!
சென்னை: டிட்வா புயல் காரணமாக இலங்கையில் சிக்கியுள்ள 150 தமிழர்களை மீட்க சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ விமானம் மூலமாக இலங்கையில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்புடன் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கான விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக இலங்கையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சுமார் இரண்டு வாரங்களாக மழை பெய்து வருவதால், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ளன. கடந்த சில நாட்களான வானிலை மிக மோசமான சூழலுக்கு சென்றதால், கொழும்பில் இருந்து விமானங்கள் இயக்கப்படவில்லை.

கொழும்பில் இருந்து புறப்படும் அத்தனை விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்த சூழலில் துபாயில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வரவிருந்த 150 தமிழர்கள் உட்பட 300 பேர் கொழும்பு விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். 3 நாட்களாக உணவு உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவிக்கின்றனர்.
இதனிடையே நேற்று கொழும்பு விமான நிலையத்தில் இருந்து தமிழர்கள் வெளியிட்ட வீடியோ வெளியாகியது. குழந்தைக்கு பால் கூட இல்லை, ஒரு வேளை உணவு மட்டுமே கொடுக்கப்படுகிறது, மின்சாரமும் இல்லை என்று பலரும் தவித்த குரலில் கூறினர். இதனிடையே போதுமான உணவு இல்லாததால், 7 தமிழர்கள் மயக்கம் அடைந்தனர்.
இதன்பின் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக கொழும்பில் சிக்கியுள்ள தமிழர்களை தொடர்புகொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதேபோல் தமிழர்களை பாதுகாப்புடன் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் உறுதி அளித்தார். இந்த நிலையில் சென்னை - தூத்துக்குடி இடையிலான விமான சேவை மீண்டும் தொடங்கி இருக்கிறது.
அதேபோல் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான இயக்கம் தொடங்கி இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கொழும்பில் சிக்கியுள்ள 150 தமிழர்களை பாதுகாப்பாக மீட்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களை இண்டிகோ விமானம் மூலமாக அழைத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் விரைவில் சென்னைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications