போடு தகிட தகிட.. தமிழகத்தில் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.. எங்கெங்கே? லிஸ்ட் இதோ!
சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஃபெங்கல் புயலாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் இன்று விழுப்புரம், திருவள்ளூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஃபெங்கல் புயலாக உருமாற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தற்போது அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி வரும் நிலையும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக இந்த புயல் சின்னம் காரணமாக, இதன் காரணமாக மயிலாடுதுறை ,நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் காரைக்காலிலும் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மேலும் தேர்வுகள் உள்ளிட்டவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் இன்று விழுப்புரம், திருவள்ளூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கன மழை காரணமாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் நடைபெறும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதே போல கடலூர் மாவட்டம் அரசு கலைக் கல்லூரியில் இன்று நடைபெற இருந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர் பணிக்கான நேர்முகத் தேர்வும் டிசம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதே போல் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கூட்டுறவு சங்க விற்பனையாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற இருந்த நிலையில் அந்தத் தேர்வு கனமழை எச்சரிக்கை காரணமாக டிசம்பர் 4 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கன மழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் இன்று நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வு நெறியாளர் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications