உருவாகிவிட்டது மிக்ஜம்.. தீவிரமாகிவிட்டது வடகிழக்கு பருவமழை.. களமிறங்கிய சென்னை மெட்ரோ.. செம அதிரடி
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக, 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் களமிறங்கி உள்ளதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது.. இது நாளைய தினம் புயலாக மாறக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

புயல்: மேலும், இந்த புயல் சென்னை மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று தற்போது சொல்லப்பட்டுள்ளது... அதேபோல, நாளை மறுநாள் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையல், இது வேகம் குறைந்து டிசம்பர் 5ம் தேதி கரையை கடப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையொட்டி, தென் மேற்கு வங்கக் கடலில் புதுவையிலிருந்து சுமார் 630 கி.மீ. கிழக்கு- தென்கிழக்கேயும் சென்னையிலிருந்து 630 கி.மீ. கிழக்கு தென் கிழக்கிலும் நிலவுகிறது.
ஆந்திரா: இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை டிசம்பர் 3ம் தேதி புயலாகவும் வலுப்பெற்று, 4ம் தேதி காலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடதமிழக- புதுவை கடலோர பகுதிகளில் நிலவக் கூடும் என்றும், பிறகு கடலோர பகுதிகளை ஒட்டி வடதிசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கடக்கக் கூடும் என்றும் சென்னை வானிலை மையமும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
புயல் ஒருபக்கம், பருவமழை இன்னொரு பக்கம் என தமிழகமே குளிர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசும் இது தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. அந்தவகையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக, களப்பணியில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட போவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆலோசனை கூட்டம்: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை மெட்ரோ ரயில் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அந்நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும்இயக்கம்) சொன்னதாவது:
மழைக்காலத்தில் ஏற்படும் எந்த சூழலையும் சமாளிக்க சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செயல்படுகிறது. மழை நீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து அங்கு மின் மோட்டார் மூலம்மழை நீரை வெளியேற்ற பல்வேறு திறன்களைக் கொண்ட 350 நீர் பம்புகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
சுரங்கப்பாதைகள்: சைதாப்பேட்டை, கோயம்பேடு, மீனம்பாக்கம், புதிய வண்ணாரப்பேட்டை போன்ற உயர்மட்ட பாதையில் இருந்து சுரங்கப் பாதைக்கு செல்லும் வழியில் மழைநீர் சுரங்கப்பாதைக்கு செல்லாத வகையிலும், அப்பகுதிக்கு யாரும் மழைநீரை திருப்பி விடாமல் இருப்பதை கண்காணிக்கவும் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின்கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களையும் கண்காணிக்க குழு அமைக்கப்பட வேண்டும். இதற்காக 24 மணி நேரமும் செயல்பட உதவி எண் 1860-425-1515 பயன்பாட்டில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் 2-ம்கட்டத்தில் பணிகள் நடைபெறும் பகுதிகளில் 20 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications