மிக்ஜாம் புயல்.. கரையை கடக்கும் போது எப்படி இருக்கும்?.. சுழன்றடிக்கப்போகும் சூறாவளி
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலானது கரையை கடக்கும் நேரத்தில் சுமார் 80 முதல் 100 கி.மீ. வரை காற்று வீச வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலிமையடைந்து நிலை கொண்டிருந்தது. இன்று காலையில் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலிமையடைந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

நாளைய தினம் அதாவது இன்னும் 24 மணி நேரத்தில் புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலானது நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பொதுவாகவே புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசக்கூடும். அதி கனமழை கொட்டித்தீர்க்கும். சில புயல்கள் காற்றை மட்டும் கொடுத்து விட்டு மழையை குறைத்து விடும். மாண்டஸ் புயல் கரையை கடந்த போது பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் வர்தா புயல் கரையை கடந்த போது சென்னையை சூறையாடி விட்டு சென்றது அந்த அளவிற்கு பலத்த சூறாவளி காற்று சுழன்றடித்தது.
ஆந்திர மாநிலத்தில் மிக்ஜாம் புயலானது கரையைக் கடந்தாலும் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
4ஆம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மிக்ஜாம் புயலானது டிசம்பர் 5ஆம் தேதி கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 100 கி.மீ. வரை காற்று வீச வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளைய தினம் கடலூர், விழுப்புரம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ. முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கரையை கடக்கும் நேரத்தில் சுமார் 80 முதல் 100 கி.மீ. வரை காற்று வீச வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications