வெள்ளக்காடான குஜராத்.. கொட்டி தீர்த்த கனமழையால் திரும்பும் பக்கம் எல்லாம் வெள்ளம்! 35 பேர் பலி
காந்தி நகர்: குஜராத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்தியாவின் 70 சதவிகித நிலப்பரப்புக்கு தென்மேற்கு பருவமழை, மழைப்பொழிவை கொடுக்கிறது. கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வந்த நிலையில், குஜராத்தில் அதன் மொத்த தீவிரத்தையும் காட்டியுள்ளது. கடந்த 2 நாட்களாக குஜராத் முழுவதும் பரவலான பகுதிகளில் பலத்த மழை பெய்திருக்கிறது. குறிப்பாக ஜாம்நகர், துவாரகா, அகமதாபாத், சூரத் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

கனமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களில் தேசிய நெடுஞ்சாலை 27ல் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருந்தது. இன்று வெள்ள நீர் சற்று வடிந்திருப்பதால், போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. அதேபோல கனமழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல், ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை பக்க சுவர் நேற்று இடிந்து விழுந்திருக்கிறது. ஜாம்நகரின் 71 கிராமங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் பன்வாட்டில் 295 மிமீ மழையும், கட்ச்சின் அப்தாசாவில் 276 மிமீ மழையும், தேவபூமி துவாரகாவில் உள்ள கல்யாண்பூரில் 263 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலைகள் ஊருக்குள் புகுந்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் 10 முதலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன.
வெள்ளம் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதால், தொலை தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. எனவே வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க, ஒன்பது மாவட்டங்களில் உள்-வட்ட ரோமிங் வசதியை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதாவது, எந்த நெட்வொர்க்கில் சிக்னல் கிடைத்தாலும், அதை மற்ற நெட்வொர்க்கை பயன்படுத்துபவர்கள், உபயோகித்துக் கொள்ள முடியும்.
தற்போதைய நிலவரப்படி குஜராத்தில் மொத்தம் உள்ள 251 தாலுகாக்களில், 13 தாலுகாக்களில் 200 மிமீக்கு மேல் மழை பெய்துள்ளது. 39 இடங்களில் 100 மிமீக்கு மேல் மழை பெய்துள்ளது. மொத்தம் உள்ள 140 சிறிய நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 206 அணைகளில், 122 அணைகளின் நீர்மட்டம் கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இப்படி திறக்கப்பட்ட நீரால் ஆற்றை ஒட்டிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.
மழை காரணமாக தண்டவாளங்களில் நீர் தேங்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது வரை 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 14 தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 6 ரயில்கள் குறுகிய நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் 23 ரயில்கள் மாற்று வழிகளில் திருப்பி விடப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக இருந்தது. தற்போது இது 35ஆக அதிகரித்திருக்கிறது. சுமார் 40 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 17 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். மீட்பு பணிகள் மற்றும் மாநிலத்தின் நிலைமை குறித்து, குஜராத் முதல்வரிடம் தொலைப்பேசியில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications