Deep Depression: புயலாக மாறுமா? மேலும் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. நாளைக்கு சம்பவம் தான்!
சென்னை: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் இது 18 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், தற்போது சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 800 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது என்றும் நாளை மாலை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
இதனால் தமிழத்தில் நாளை டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கும், சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

மேலும் வலுப்பெற்றது
நேற்று தென்கிழக்கு வங்கக் கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் -பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவியது.
இது, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேலும், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 08.30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 980 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. தொடர்ந்து 18 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்றுள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் புயல்
தற்போது சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 800 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக நகர்ந்து, இலங்கை கடலோரப்பகுதிகளில், ஹம்பாந்தோட்டை (இலங்கை) மற்றும் கல்முனைக்கு (இலங்கை) இடையே நாளை வெள்ளிக்கிழமை மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என கணிக்கப்படுகிறது.
இதுமட்டும் இன்றி தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்றதால் புயலாக மாற சான்ஸ் இருக்கிறது எனவும் அப்படி புயலாக மாறினால் 2026 ஆம் ஆண்டின் முதல் புயலாக இது இருக்கும்.
மிக கனமழை கொட்டும்
தமிழகத்தில் நாளை, கடலோர தமிழகம், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் சுன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் சனிக்கிழமை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரியில் உறைபனி
குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
11 ஆம் தேதியில் இருந்து 13 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னையில் இடி, மின்னலுடன் மழை கொட்டும்
சென்னையில் நாளை 9 ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். என்று கூறப்பட்டுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications