தலைவர்கள் பூராம் ரெஸ்ட்ல இருக்காங்க? களத்துல இருக்கிறது யாரு..? திமுக ராஜீவ் காந்தி பரபர பதிவு!
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டிய மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறிய நிலையில், மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இன்று காலையிலேயே முதல்வர் நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், திமுகவின் ராஜீவ் காந்தி, மற்ற கட்சிகளை விமர்சித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னையில் கனமழை சாறெடுத்தது. நேற்று முன் தினம் விடிய விடிய தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையை அப்படியே முடக்கிப்போட்டது மிக்ஜாம் புயல். தற்போது மிக்ஜாம் புயல் சென்னையை கடந்துவிட்ட நிலையில், மழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல், மழை, வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் புயல், மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பல்வேறு குழுக்களும், ஐஏஎஸ் அதிகாரிகளையும் நியமனம் செய்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களையும் மீட்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் பார்வையிடுமாறும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறும் அறிவுறுத்தியிருந்தார். மேலும், புயல், மழை பாதிப்பு தொடர்பாக அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களிடம் தொலைபேசி வாயிலாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டறிந்தார். மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்றும் மழை பாதிப்புகள் குறித்தும் நேற்று வீடியோ கால் வாயிலாகவும் கேட்டறிந்தார்.
மிக்ஜாம் புயல் தற்போது சென்னையை விட்டு விலகி ஆந்திரா நோக்கிச் சென்றுள்ளது. இதையடுத்து, மழை ஓய்ந்து, வெயில் அடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நகர் முழுவதும் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் அதிரடி கள ஆய்வை இன்று காலையிலேயே தொடங்கினார்.
முதல்வர் ஸ்டாலின் வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை சென்ட்ரல் கண்ணப்பர் திடல் நிவாரண முகாமில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் பெரியமேடு நிவாரண முகாம்களில் ஆய்வு செய்தார். அப்போது அவர் மக்களுக்கு உணவு பரிமாறினார். பின்ன, மழை வெள்ள பாதிப்புகள் குறித்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினார்.
இந்நிலையில், திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி, தமிழக அரசின் துரிதமான பணிகளை பாராட்டியும், மற்ற கட்சிகளின் தலைவர்களை விமர்சித்தும் எக்ச்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர்களும் சென்னை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், மற்றவர்கள் ஓய்வெடுத்து வருவதாகவும் கூறியுள்ளார் ராஜீவ் காந்தி.
ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், "முக்கிய தலைவர்களின் இன்றைய (05-12-2023) நிகழ்ச்சிகள்!
🔸 மேதகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கிண்டி ராஜ் பவன் இல்லத்தில் ஓய்வில் உள்ளார்!
🔸 முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னை இல்லத்தில் ஜெயலலிதா இறந்த நன்னாளில் என சொல்லி உறுதி மொழி எடுத்துவிட்டு ஓய்வில் உள்ளார்.
🔸 முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் சென்னை இல்லத்தில் ஓய்வில் உள்ளார்!
🔸 அமமுக பொதுச் செயலாளர் டிடிவிதினகரன் அவர்கள் ஓய்வில் உள்ளார்!
🔸 சீமான் அவர்கள் கற்பனை செய்து கொண்டு கடும் ஓய்வில் உள்ளார்!
🔸மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தைலாபுரத்தில் உள்ளார்.
🔸 மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் துபாயில் COP28 கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
🔸அண்ணாமலை அவர்கள் பெங்களூரில் தன் நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.
🌤️ முதலமைச்சரும், சக அமைச்சர்களும் களத்தில் உள்ளனர்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
*முக்கிய தலைவர்களின் இன்றைய (05-12-2023) நிகழ்ச்சிகள்!
— R.Rajiv Gandhi (@rajiv_dmk) December 5, 2023
🔸 மேதகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள்
கிண்டி ராஜ் பவன் இல்லத்தில் ஓய்வில் உள்ளார்!
🔸 எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்
சென்னை இல்லத்தில் ஜெயலலிதா இறந்த நன்னாளில் என சொல்லி உறுதி மொழி எடுத்துவிட்டு ஓய்வில் உள்ளார்.
🔸…
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications