சென்னைக்கு ரெட் அலர்ட்! கஜா, வர்தா போல் இருக்குமா மிக்ஜாம் புயல்? வெதர்மேன் அப்டேட்
சென்னை: மிக்ஜாம் புயல் எந்த மாதிரியான புயலாக இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு தென் மேற்கு வங்கக் கடலில் புதுவையிலிருந்து சுமார் 630 கி.மீ. கிழக்கு- தென்கிழக்கேயும் சென்னையிலிருந்து 510 கி.மீ. கிழக்கு தென் கிழக்கிலும் நிலவுகிறது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நாளை டிசம்பர் 3ஆம் தேதி புயலாகவும் வலுப்பெற்று, 4ஆம் தேதி காலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடதமிழக- புதுவை கடலோர பகுதிகளில் நிலவுக் கூடும். பிறகு கடலோர பகுதிகளை ஒட்டி வடதிசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கடக்கக் கூடும்.
கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். கடலில் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த நிலையில் இந்த புயலானது எப்படிப்பட்ட புயலாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
புயல் என்றாலே காற்று, காற்று வீசும் வேகம், மழையின் தீவிரம் உள்ளிட்டவை எப்படி இருக்கும் என்பதெல்லாம் கணக்கில் கொள்ளப்படும். அந்த வகையில் இந்த மிக்ஜாம் புயல் எப்படி இருக்கும் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது: சென்னை, திருவள்ளூருக்கு மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
இந்த மிக்ஜாம் புயல் எப்படி இருக்கும் என்றால் காற்றை விட அதிக மழையை கொடுக்கும். மழை பொழிவு 100 மி.மீ. முதல் 200 மி.மீ வரை கூட பெய்யலாம். இது கஜா, தானே, வர்தா போல் புயல் காற்றை அதிகஅளவுக்கு வீசாது என தெரிவித்துள்ளார். அது போல் அவருடைய எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 15 ஆண்டுகளில் தமிழக கடற்கரை நோக்கி செங்குத்தாக கரையை கடந்த வர்தா, தானே, கஜா ஆகியவை அதிக காற்றை வீசின. ஆனால் குறைந்த மழையை கொடுத்தன.
கடந்த 20 ஆண்டுகளில் தென்கிழக்கிலிருந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்த 3 புயல்களும் மழையை கொடுக்கும் புயல்களாகவே இருந்தன. அவ 2006ஆம் ஆண்டு வந்த ஓகி, 2020ஆம் ஆண்டு வந்த நிவர் புயல், 2008ஆம் ஆண்டு வந்த நிஜா புயல். இவை மூன்றுமே காற்றை விட அதிக மழையை கொடுத்தது என குறிப்பிட்டுள்ளார். எனவே மிக்ஜாம் புயலும் மழையே அதிகமாக கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications