புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல்.. எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு? லிஸ்ட்
சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டத்தில் நாளை திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், தருமபுரி, ராணிப்பேட்டை, வேலூர், சேலம் ஆகிய 5 மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கனமழை காரணமாக புதுவையிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல்: ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை 5.30 மணி அளவில் இருந்து 11.30 மணி வரை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுவை அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 60- 70 கிமீ வேகத்தில் காற்று வீசியது. ஒருசில இடங்களில் 90 கிமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று காலையில் இருந்தே புதுவையில் மழை கொட்டி வருகிறது. குறிப்பாக புயல் கரையை கடந்த பின்னர் புதுவை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. புயல் முழுவதுமாக கரையை கடந்து விட்ட போதும் மழை விட்டு வெளுத்து வாங்கியது. இன்று காலையில் சிறிது மழை விட்டாலும் தொடர்ந்து கனமழை கொட்டியது.
48 செமீ மழை: இதனால் புதுவையில் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக இன்று காலை 10.30 மணியளவில் அரை மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று காலை 8.30 மணியில் இருந்து இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதுவையில் 48.4 செமீட்டர் பழை பதிவானது.
இது புதுவையில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையாகும். நகரே வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில் பெரும்பாலான மக்கள் மொட்டை மாடியில் தான் தங்கியுள்ளனர். சிலர் பாதுகாப்பாக முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். புயல் மற்றும் கனமழை காரணமாக புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.
மீட்பு பணி: பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சுமார் 500 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை காரிசன் பட்டாலியன் இந்திய ராணுவ படையினர் இன்று புதுச்சேரி வருகை தந்தனர். மேஜர் அஜய் சங்வான் தலைமையில் 6 ஜூனியர் அதிகாரிகள், 62 இதர ரேங்குகளை உள்ளடக்கிய பேரிடர் நிவாரண ராணுவ குழுவினர் புதுச்சேரியில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புதுவையில் லீவு: மீட்பு பணியில் தொடர்ந்து அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், புதுவையில் நாளை டிசம்பர் 2 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருவதன் காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து புதுவை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எத்தனை மாவட்டங்களுக்கு லீவு: இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திற்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், திருவண்ணாமலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார். தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார்.
வேலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மற்றும் ராணிப்பேட்டையிலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதேபோன்று சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி கூறியுள்ளார்.
* விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
* வேலூர், தருமபுரி, ராணிப்பேட்டை , திருப்பத்தூர், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications