ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும்.. சென்னை சாலைகளில் நடக்கும் ட்விஸ்ட்.. கவனமா இருங்க.. நேரடி ரிப்போர்ட்!
சென்னை: கனமழைக்கு இடையே சென்னையில் சாலைகளில் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளம் ஏற்பட தொடங்கி உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக சாலைகளில் தண்ணீர் நிரம்ப தொடங்கி உள்ளது. சரி.. சென்னை சாலைகளில் என்ன நிலவரம் உள்ளது.. ஒரு நேரடி ரிப்போர்ட்.
சென்னை அசோக் நகர்.. மேற்கு மாம்பலம்.. ஈக்காட்டுத்தாங்கல்.. சைதாப்பேட்டை பகுதிகளில் நிலவும் வானிலை மற்றும் சாலை நிலைகளை வைத்து இந்த செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. சென்ற வருடம் புயல் காரணமாக வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.

11 மணி நிலவரப்படி இந்த சாலைகளில் தண்ணீர் லேசாகவே இருந்துள்ளது. அதாவது முழங்கால் அளவிற்கு தண்ணீர் இருந்துள்ளது. ஆனால் அடுத்த 10 நிமிடத்தில் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக மழை காரணமாக அதிகரித்தது. மழை பெய்ய பெய்ய வேகமாக தண்ணீர் அதிகரித்தது.
இதற்கு காரணம்.,. சாலை கழிவுநீர் குழாய்கள் நிரம்பி வெளியே வந்தது. கழிவு நீர் குழாய்கள் நிரம்பி மொத்தமாக தண்ணீர் வெளியே வந்து மழை நீருடன் கலக்க தொடங்கியது. மழை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க அதிகரிக்க..தண்ணீரும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகிகள் ஆங்காங்கே இருந்தனர். கழிவு நீர் குழாய்களை ஆய்வு செய்து.. அதில் அடைப்புகளை எடுத்துக்கொண்டு இருந்தனர். சாலைகளில் கழிவு நீர் குழாய்கள் எங்கெல்லாம் பள்ளமான இடத்தில் இருக்கிறதோ அங்கெல்லாம் மோட்டார் போட்டு.. தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு வெளியே அனுப்பப்பட்டது.
ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் மழை காரணமாக தண்ணீர் வேகமாக உயர தொடங்கி உள்ளது. சில இடங்களில் பைக் கூட செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. முக்கியமாக மெயின் சாலைகள் இல்லாமல் கிளை சாலைகள் மோசமாக தண்ணீர் காரணமாக மூழ்க தொடங்கி உள்ளது. அதிலும் 11 மணி முதல் 12 மணி வரை விடாமல் பெய்த ஒரு மணி நேர மழை காரணமாக.,. சென்னையில் சாலைகளில் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளம் ஏற்பட தொடங்கி உள்ளது. சில இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கினாலும் போக்குவரத்து பாதிக்கும் அளவிற்கு எங்கும் தண்ணீர் தேங்கவில்லை.
முக்கியமாக கிளை சாலைகளில் கொஞ்சம் கொஞ்சமாக சாலைகளில் தண்ணீர் நிரம்ப தொடங்கி உள்ளது. இதேதான் கிண்டி, வேளச்சேரி, நந்தனம், சின்னமலை, ஆலந்தூர், நங்கநல்லூர் பகுதிகளிலும் நிலையாக உள்ளது.
தண்ணீர் இல்லை: அதே சமயம் சென்னை மாநகராட்சி பகுதியில் மொத்தம் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது. சென்னையில் எந்த சுரங்க பாதையிலும் போக்குவரத்து தடை செய்யப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது.
சென்னை மழைக்கு இடையே மாநகராட்சி துரித நடவடிக்கையால் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. சென்னையில் உள்ள 22 போக்குவரத்து சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் சேதமடைந்த சாலைகளை உடனுக்குடன் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சேதம் அடைந்த சாலைகள் சிமெண்ட் சாலைகள் மூலம் பேட்ச் செய்யப்பட்டு வருகின்றன.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications