இன்று ஆலங்கட்டி மழை அடிச்சு நொறுக்கப் போகுதாம்.. வெயிலுக்கு மத்தியில் வெதர்மேன் ‘குளுகுளு’ மெசேஜ்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். கோடை வெயில் கொளுத்தி வருவதற்கு மத்தியில் சில இடங்களில் மழை பொழியும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான், வானிலை தொடர்பாக தொடர்ந்து அப்டேட்களை அளித்து வருகிறார். அந்தவகையில் தமிழ்நாட்டில் இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வெப்பநிலை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வெப்பச் சலனம் நிலவி வரும் சூழலில், மதிய நேரங்களில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதற்கிடைய பல்வேறு மாவட்டங்களில் மழையும் பெய்து வருகிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வெப்பநிலை
தமிழ்நாட்டின் வானிலை பதிவு மையங்களில் 01.05.2025 அன்று (நேற்று) மாலை நிலவரப்படி வெப்பநிலையில் வேலூர் எளிதாக முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் 3 நிலையங்கள் மட்டுமே வெப்பநிலையில் 38 டிகிரி செல்சியஸை தாண்டின. இது மே மாதத்தில் மிகவும் நல்ல விஷயம்.
கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை மெதுவாக அதிகரித்து, நாகை, கடலூர் ஆகிய பகுதிகள் அனைத்தும் 37 டிகிரியை கடக்கின்றன. மேற்கு பருவமழை நெருங்கும்போது, மேற்கு திசைகள் வலுவடைந்து, உட்புறங்களில் வெப்பம் கடலோர பகுதிகளுக்குச் சென்று, உட்புறங்களை விட அதிக வெப்பமாக மாறும்.
வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகியுள்ள இடங்கள்
வேலூர் - 39.6
திருத்தணி - 39.0
கரூர் - 38.5
இன்று (வெள்ளிக்கிழமை) வெப்பநிலை
வேலூர் பகுதி தொடர்ந்து தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும்.
மழை பதிவான இடங்கள்
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பதிவாகியுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) மழை பெய்யும் பகுதிகள்
கீழ்க்கண்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, நீலகிரி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட கேரள மாவட்டங்களில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சென்னை வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை தாண்டியது. சென்னை விமான நிலையம் (மீனம்பாக்கம்) நகரின் உள் பகுதியில் 37.2 C பதிவாகியுள்ளது. இன்றும் இதேபோன்று + அல்லது - 0.5 C ஆக இருக்கும்.
வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக 02-05-2025 மற்றும் 03-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
04-05-2025 மற்றும் 05-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் லேசானது முதல் மிதமான மழை காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பெய்யக்கூடும். 06-05-2025 மற்றும் 07-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ்












Click it and Unblock the Notifications