திருவள்ளூர் டூ தென்காசி வரை.. அடுத்த 2 மணி நேரம்! வெளுக்க போகும் மழை.. 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சென்னை: அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் திருவள்ளூர் முதல் தென்காசி வரை 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக கோவை, மதுரை, நாமக்கல், திண்டுக்கல், சேலம் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே சென்னை முதல் குமரி வரை என பல்வேறு மாவட்டங்களிலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சில நேரங்களில் வெயிலும் சில நேரங்களில் மழையும் என மாறி மாறி கிளைமேட் இருந்து வருகிறது.

வரும் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதியோடு தென்மேற்கு பருவமழை விலக தொடங்கும் என்றும் இந்த காலக்கட்டத்திற்குள் நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்யும் என்று வானிலை மையம் கூறியிருந்தது.
அதற்கு ஏற்றார்போலவே பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை கொட்டி வருகிறது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழையானது பெய்து வருகிறது. இந்த சூழலில் அடுத்த 2 மணி நேரத்திற்கு வெயிலே இல்லாத வகையில் திருவள்ளூர் முதல் தென்காசி வரை 12 மாவட்டங்களில் மழை வெளுத்து எடுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திண்டுக்கல், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, நீலகிரி, திருவள்ளூர் ஆகிய 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications