பேய் மழை கொட்டப் போகுது.. 8 மாவட்டங்களை டிக் அடித்த ‘ஆரஞ்சு’ பூதம்! குடை இல்லாமல் வெளியே போகாதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக இன்று காலை 10 மணி வரை கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மற்றும் தென்காசியில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் பிப்ரவரி முதல் மே மாதம் வரை மிகுந்த உச்சத்தில் இருக்கும். அப்போதெல்லாம் வெயில் கொளுத்தி எடுக்கும் என்பதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாவார்கள். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரியில் வெயில் உச்சம் தொட்ட நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக ஜூன் மாதத்தில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்தது. குறிப்பாக மதுரை, சென்னை ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ஜூன் மாதத்திற்கு பிறகு அதாவது தமிழில் ஆடி மாதத்தில் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

weather hear IMD

அதற்கு பிறகு மழையின் தாக்கம் தொடங்கும். தற்போது அவ்வப்போது பலத்த காற்று வீசி வந்தாலும் தென் மாவட்டங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆறுதல் அளிக்கும் விதமாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டு அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று எட்டு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக இன்று காலை 10 மணி வரை கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மற்றும் தென்காசியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் " என கூறப்பட்டுள்ளது.

மழை அதிகரிப்பு: இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களைத் தவிர்த்து, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2025 இல் இயல்பை விட அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தென்மேற்கு பருவமழையின் இரண்டாம் பாதி வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் காணப்பட்ட போக்கே தொடர்கிறது. ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை, நாட்டில் 474 மிமீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது, இது நீண்ட கால சராசரியை விட ஆறு சதவீதம் அதிகம். இந்த உபரி போக்கு பருவமழை காலத்தின் பிற்பகுதியில் நீடிக்கும் என்றும், இது விவசாய நடவடிக்கைகளுக்கு பயனளிக்கும்" என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+