விடிய விடிய மழை "லீவுலாம் இல்லை.." சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. மாவட்ட ஆட்சியர்
சென்னை: சென்னையில் இரவு முதல் விடிய விடிய இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனிடையே, சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களை தவிர பல மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. தென்மேற்கு பருவமழை அதிகம் பொழியும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை அதிக அளவில் பெய்யவில்லை. அதேபோல், ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது சம்மர் வந்து விட்டதோ என எண்ணும் வகையில் மாதத்தின் துவக்கத்தில் வெயில் வாட்டி வதைத்தது.

கடுமையான வெப்பம் நிலவிய நிலையில், கடந்த சில தினங்களாக வானிலை மாறி அவ்வப்போது தமிழகம் முழுவதும் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதலே மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு மழை பெய்ய தொடங்கியது. இரவு நேரத்தில் விடிய விடிய இடி மின்னலுடன் கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என மாணவர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில், சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications