அடுத்த 2 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை! மஞ்சள் + ஆரஞ்ச் அலர்ட்! வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று மாலை 6 மணிக்குள் 13 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை வெளுத்து எடுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கோவை, சேலம், தருமபுரி, நெல்லை, தென்காசி என 13 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் நிலவி வருகிறது. கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் அனலை கக்கி வந்த நிலையில், தற்போது மேலும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனினும் அவ்வப்போது மழை வந்து கொஞ்சம் ஜில் ஆக்கிவிட்டு சென்றுவிடுகிறது. நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் இது தான் கடந்த 10 நாட்களின் நிலை.

13 மாவட்டங்களில்
காலையில் இருந்து மதியம் வரை வெயில் சுட்டெரித்து விடுகிறது. மதியத்திற்கு பிறகு மேகமூட்டத்துடன் காட்சியளித்து இறுதியில் லேசான மழையோ அல்லது கனமழை கொட்டி செல்கிறது. இந்த நிலையில் வரும் 25 ஆம் தேதி வரை தமிழகத்தில் கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- " முதலில் தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறியிருந்தது. இதன்பின்னர் மற்றொரு அறிவிப்பில் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், அடுத்த 2 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.
ஆரஞ்சு + மஞ்சள் நிற அலர்ட்
இதில் வானிலை மையம் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று மாலை 6 மணி வரை தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோன்று, இன்று மாலை 6 மணி வரை நெல்லை, குமரி மற்றும் தேனி ஆகிய 3 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் எப்படி இருக்கும்?
வரும் 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 - 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அசவுகரியம் ஏற்படலாம்
வெப்பநிலைய பொறுத்தவரை இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும். 19-04-2025 முதல் 21-04-2025 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
மழை நிலவரம் (செமீ)
அணைகெடங்கு (கன்னியாகுமரி) 8 செமீ,
மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி) 7 செமீ,
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 6 செமீ,
பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 4 செமீ,
வால்பாறை PTO (கோயம்புத்தூர்), பயணியர் விடுதி சிவகங்கை (சிவகங்கை), உபாசி TRF AWS (நீலகிரி), பி.என்.பாளையம் ARG (கோயம்புத்தூர்), சோத்துப்பாறை (தேனி), உதகமண்டலம் (நீலகிரி), பென்னாகரம் (தர்மபுரி), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), பெரியகுளம் (தேனி) தலா 3,
ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), சுருளக்கோடு (கன்னியாகுமரி) தலா 3 செமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
இயற்கை அரக்கன்! இந்தியாவை தாக்கும் மான்ஸ்டர் எல் நினோ.. மாபெரும் பஞ்சம் ஏற்படுமாம்.. அதிர்ச்சி தகவல் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications