கோவையில் நள்ளிரவு வரை கொட்டி தீர்த்த கனமழை.. ரயில்கள் தாமதமானதால் பயணிகள் அவதி!
கோவை: கோவையில் பெய்த கனமழை காரணமாக ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரவேண்டிய மெமோ ரயில் இனியும் 20 நிமிடங்களுக்கும் மேலாக தாமதம் ஆனது. இதனால், பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்தது. குறிப்பாக கோவையில் இன்று காலையில் இருந்தே பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக , அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னர், கிக்கானி பள்ளி அருகில் உள்ள பாலம், காளீஸ்வரா மில் சாலை, மேட்டுப்பாளையம் சாலை சிவானந்தா காலனி ஏ.ஆர்.சி பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடானது.
#கோவை pic.twitter.com/cyVSwTK4QN
— S.ManiSingh (@s_manisingh) October 22, 2024
தேங்கிய மழைநீர் மாநகராட்சி அலுவலர்கள் மூலமாக மழைநீர் விரைவாக வெளியேற்றப்பட்டது. கடுமையான மழை காரணமாக இரவு 9:20க்கு புறப்பட்டு சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் தாமததாக சென்றது. அதேபோல, கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரவேண்டிய மெமோ ரயிலும் 20 நிமிடங்களுக்கும் மேலாக தாமதம் ஆனது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். கனமழை காரனமாக ரயில் பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

தேங்கிய மழைநீர் மாநகராட்சி அலுவலர்கள் மூலமாக மழைநீர் விரைவாக வெளியேற்றப்பட்டது. கடுமையான மழை காரணமாக இரவு 9:20க்கு புறப்பட்டு சென்னை செல்லும நீலகிரி எக்ஸ்பிரஸ் தாமததாக சென்றது. அதேபோல, மேலும் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரவேண்டிய மெமோ ரயிலும் இனியும் 20 நிமிடங்களுக்கும் மேலாக தாமதம் ஆனது. கனமழை காரனமாக ரயில் பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

கோவை மட்டுமின்றி திருப்பூரிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்திலும் இடி மற்றும் மின்னலுடன் நள்ளிரவில் கனமழை கொட்டி தீர்த்தது. தென்காசி மாவட்டத்தில் மதியம் 2 மணியில் இருந்து 3 மணி வரை மழை விடாமல் கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடையம், ஆலங்குளம், பாபநாசம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகள் கனமழை கொட்டி தீர்த்தது.
மீண்டும் இரவு நேரத்திலும் ஒருசில இடங்களில் மழை தொடர்ந்தது. இதனால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. குற்றாலம் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று புதன்கிழைமை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications