மங்களூரில் வெளுத்தெடுத்த கனமழை! எங்கும் வெள்ளம்! மண்சரிவு, மின்சாரம் தாக்கி 7 பேர் பலி!
மங்களூர்: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் மங்களூரு நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மழை தொடர்பான பாதிப்புகளால் 7 பேர் பலியான சோக சம்பவமும் நடந்துள்ளது.
கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணிக்கு தட்சிண கன்னடா மாவட்டத்தில் கனமழை பெய்தது.

அதிலும் மங்களூரில் கனமழை கொட்டித் தீர்த்தது. மொந்தேபதவுகொடி என்ற இடத்தில் ஒரு வீட்டில் மண் சரிந்து விழுந்து, வீட்டில் இருந்த இரு குழந்தைகள் உள்பட 6 பேர் இடிபாடுகளில் சிக்கித் தவித்தனர்.
கனமழை பெய்ததால் இந்த மண் சரிவு நடந்தது அக்கம் பக்கத்து வீட்டினருக்குக் கூட தெரியவில்லை. காலையில் எழுந்து பார்த்த போதுதான் நிலச்சரிவில் வீடு இடிந்தது தெரியவந்தது.
தகவலறிந்ததும் தட்சிணா கன்னடா மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவினர் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் மூதாட்டியும் அவரது இரு பேர குழந்தைகளும் என 3 பேர் உயிரிழந்தனர்.
அது போல் பெல்லுகிராமா கிராமத்தில் மண் சரிந்ததால் வீட்டின் கூரை இடிந்து 10 வயது சிறுமி உயிரிழந்தார். அது போல் மழையால் கடலுக்குள் யாரும் செல்ல வேண்டாம் என கூறியும் நாட்டுப்படகில் சென்ற மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
அது போல் மழை பெய்து கொண்டிருந்த போது டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கிக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் ஒருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். நேற்று அதிகாலை கொட்டிய மழையால் மங்களூரே வெள்ளக்காடாக மாறியது.
100-க்கும் மேற்பட்டோரின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன. மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன. மங்களூரில் இருந்து கேரளாவின் சொர்ணூர் செல்லும் ரயில் பாதையில் மரமிகட்டே எனும் இடத்தில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது.
இந்த மரம் தண்டவாளத்தில் விழுந்தது. அந்த நேரத்தில் நல்வாய்ப்பாக எந்த ரயிலும் வராததால் எந்த அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை. கனமழை எதிரொலியால் தட்சிணா கன்னடா மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நேற்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மங்களூரின் கோட்டேகாருவில் 31.3 செ.மீ. மழை பெய்தது. பெங்களூரில் கனமழை பெய்து வருகிறது.
அது போல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்தது. நேற்றைய தினம் சென்னையில் கருமேகம் சூழ்ந்து கனமழை வெளுத்தது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications